ஹிட் அடிக்குமா காதல் கொண்டேன் கூட்டணி… செல்வா நெகிழ்ச்சி பதிவு

தனுஷ் - செல்வராகவன் எனும்போது நம் ஞாபகத்திற்கு வருவது துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன போன்ற சில நல்ல திரைப்படங்கள்.

இவ்விருவரும் கடைசியாக சேர்ந்து பணியாற்றிய படம் 2011ஆம் ஆண்டு ரிலீஸான மயக்கம் என்ன. அதன் பிறகு பல ஆண்டுகள் கழித்து மீண்டும் இருவரும் சேர இருக்கும் படம் நானே வருவேன்.

இதற்கிடையே செல்வராகவன் தனது தம்பியான தனுஷ் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு அவரை புகழ்ந்துள்ளார்.

தனுஷ் செல்வராகவன்

தனுஷ் செல்வராகவன்

மயக்கம் என்ன திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் - செல்வராகவன் இருவரும் சேர்ந்து படங்களை பண்ணாதது திரைப்பட ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருந்து வந்தது. இருவரும் இணைந்தால் தரமான சில திரைப்படங்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது . மக்கள் கோரிக்கை நிறைவேறும் விதமாக சில மாதங்களுக்கு முன் ஒரு அறிவிப்பு வெளியானது. தனுஷ் மற்றும் செல்வராகவன் இரண்டு பொது படங்களில் இணைய உள்ளார்கள் என்று. அதில் ஒன்று ஆயிரத்தில் ஒருவன் 2, இரண்டாவது நானே வருவேன். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் ஆழ்ந்தனர். ஆயிரத்தில் ஒருவன் 2 பெரிய பட்ஜெட் படம் என்பதால் அதற்கு முன்பு நானே வருவேன் படத்தை எடுத்து முடிக்க படக்குழு முடிவு செய்துள்ளது.

பிரபு இணைந்துள்ளார்

பிரபு இணைந்துள்ளார்

செல்வராகவன் இயக்கும் நானே நானே வருவேன் திரைப்படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடிக்க கதாநாயகியாக இந்துஜா ரவிச்சந்திரன் நடிக்கிறார். இதுமட்டுமில்லாமல் செல்வராகவன் இதில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. யோகி பாபு ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். தற்போது இந்த படத்தில் நடிகர் பிரபு இணைய உள்ளார். இதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இதற்கு முன்பு " 3 " படத்தில் தனுஷ் பிரபுவுடன் நடித்துள்ளார்.

ஒரே நேரத்தில் தனுஷ்

ஒரே நேரத்தில் தனுஷ்

தற்போது நடிகர் தனுஷ் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். Venky Atluri இயக்கும் இந்த படத்திற்கு வாத்தி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படம் நடிக்கும் அதேநேரத்தில் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்தில் நடித்து வருகிறார் தனுஷ். கிட்டத்தட்ட பத்து வருடம் கழித்து அண்ணன் தம்பி இணைந்துள்ளதால் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது நானே வருவேன் திரைப்படம்.

நெகிழ்ச்சி பதிவு

நெகிழ்ச்சி பதிவு

இதற்கிடையே செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தனுஷ் படத்தை பதிவிட்டு தனது ஆதங்கத்தை பதிவு செய்துள்ளார். அதில் " நாங்கள் சேர்ந்து உரையாடும் பொன்னான நேரம் எங்களுக்கு பல காலமாக கிடைக்கவில்லை. அவரவர் வேலைகளில் பிஸி ஆனதால் அது நடக்கவில்லை. தற்போது நானே வருவேன் படத்தில் மூலமாக அந்த வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி. தனுஷ் தங்கமான குணம் படைத்தவர் " என தனது தம்பியை குறிப்பிட்டு நெகிழ்ந்து உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X