துபாய் 2.ஓ இசை விழா... கமல் ஹாஸனும் மேடை ஏறுவாரா?

By Shankar

Recommended Video

2.0 இசை வெளியீடு: ஷங்கர் தெரிந்து செய்கிறாரா, தெரியாமல் செய்கிறாரா?-வீடியோ

துபாய்: இன்று மாலை துபாயில் ரஜினிகாந்தின் 2.ஓ பட இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடக்கிறது.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் படத்தின் இரு பாடல்களை லைவாக கச்சேரி நடத்தி அறிமுகப்படுத்துகிறார்.

வாங்க கமல்

வாங்க கமல்

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளுமாறு நடிகர் கமல் ஹாஸனுக்கும் அழைப்பு விடுத்துள்ளனர் லைகா நிறுவனமும் இயக்குநர் ஷங்கரும். இந்த அழைப்பை ஏற்று கமல் ஹாஸனும் கலந்து கொள்வார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

கமல் வருவார்

கமல் வருவார்

லைகா, ஷங்கர் இருவருமே கமல் ஹாஸனின் இப்போதைய சூழலில் மிக முக்கியமானவர்கள். இந்தியன் 2 படத்தில் கமல் நடிக்க, ஷங்கர் இயக்குகிறார். அதை லைகா நிறுவனம்தான் தயாரிக்கிறது.

ரஜினி Vs கமல்

ரஜினி Vs கமல்

ரஜினிக்கு பதிலடி தர கமல் ஹாஸனுக்கு ஒரு மேடை தேவைப்படுகிறது. சிவாஜி மணி மண்டப திறப்பு விழாவில், தொடர்ந்து தன்னை சீண்டியபடி இருந்த கமல் ஹாஸனுக்கு நாசூக்காக ஒரு பதிலடி கொடுத்தார் ரஜினி. அதற்கு பலரும் பல்வேறு விதமாக விளக்கம் கூறிக் கொண்டிருந்தனர்.

ஒரு மேடை தேவை

ஒரு மேடை தேவை

ஆனால் கமல் ஹாஸனுக்கு எல்லாம் புரிந்துவிட்டது. அடுத்து அவர் தான் எழுதிவரும் தொடரில் ரஜினி பேச்சுக்கு விளக்கம் என நீளமாக எழுதினார். ஆனாலும் அது பெரிதாக எடுபடவில்லை. எனவே ஏதாவது ஒரு மேடையில் வைத்து பதில் தந்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாய் இருக்கிறார். இந்த 2.ஓ இசை வெளியீட்டு மேடையை அவர் பயன்படுத்திக் கொள்வார் என்கிறார்கள்.

துபாயில் கமல்?

துபாயில் கமல்?

ஆனால் கமல் ஹாஸன் துபாய் புறப்பட்டுவிட்டாரா? இன்னும் தகவல் உறுதியாகவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X