கலைஞர் 100 விழாவில் கமல் பங்கேற்பாரா?.. பிக் பாஸ் தமிழ் 7 ஷூட்டிங் இருக்கே பாஸ் இன்னைக்கு!
சென்னை: கலைஞர் 100 விழா இன்று பிரம்மாண்டமாக மாலை 4 மணி முதல் சென்னை கிண்டியில் உள்ள ரேஸ் கோர்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் சினிமா, தெலுங்கு சினிமா, கன்னட சினிமா மற்றும் மலையாள சினிமாவில் இருந்து முன்னணி நடிகர்கள் மற்றும் ஆளுமைகள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்பார்கள் என அழைப்பிதழில் அச்சிடப்பட்டு தயாரிப்பாளர் சங்கம் சார்பில் அவர்களுக்கு நேராக வழங்கிய புகைப்படங்களும் வெளியாகி இருந்தன. இந்நிலையில், கமல் இந்த விழாவில் பங்கேற்பாரா மாட்டாரா என்கிற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
அதற்கு காரணம் பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி ஷூட்டிங் இன்று சனிக்கிழமை என்பதால் பூந்தமல்லியில் உள்ள இவிபி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருவது தான். கமல் பங்கேற்ற முதல் பிக் பாஸ் ப்ரோமோ வெளியாகி உள்ள நிலையில், அந்த சூட்டிங்கை முடித்துவிட்டு கலைஞர் 100 விழாவுக்கு கமல் வருவாரா மாட்டாரா என்கிற கேள்வி எழுந்துள்ளது.

மோகன்லால் முதல் பிரபாஸ் வரை: கலைஞர் 100 நிகழ்ச்சி தயாரிப்பாளர் சங்கம் சார்பில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ள நிலையில், தமிழ் சினிமாவை தாண்டி தென்னிந்திய சினிமா பிரபலங்களையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கன்னட நடிகர் சிவராஜ்குமார், மலையாளம் நடிகர் மோகன்லால், தோழி நடிகர் பிரபாஸ் உள்ளிட்டோர் பங்கேற்க போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விஜய், அஜித் வருவார்களா?: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் தமிழ் சினிமாவுக்கு பல வகையில் தொண்டாற்றிய கருணாநிதியை கௌரவிக்கும் விதமாக நடத்தப்படும் கலைஞர் 100 விழாவில் பங்கேற்பார்களா என்கிற கேள்வி எழுந்துள்ளது. நடிகர் விஜய் வருவது உறுதி என்றும் அஜித் வருவது சந்தேகம்தான் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 22 ஆயிரம் பேர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போவது குறிப்பிடத்தக்கது.
கமல் பங்கேற்பாரா?: வாராவாரம் சனிக்கிழமைகளில் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கான எபிசோடுகள் காலை முதல் இரவு வரை எடுக்கப்பட்டு வரும் நிலையில், மாலை 4 மணிக்கு ஆரம்பமாக உள்ள கலைஞர் 100 விழாவில் கமல்ஹாசன் பங்கேற்பாரா என்பது கேள்விக்குறியாகி உள்ளது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியின் படப்பிடிப்பை முடிந்தவரை சீக்கிரமே முடித்துவிட்டு இரவு 7 மணி அல்லது 8 மணிக்குள் கமல்ஹாசன் கலைஞர் 100 நிகழ்ச்சிகள் கலந்து கொள்வார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











