பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்... புதிய கூட்டணி?

சென்னை : இயக்குனர் பா ரஞ்சித் சமூகத்திற்கு தேவையான மிக முக்கிய படங்கள் இயக்கி இப்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களின் பட்டியலில் இணைந்துள்ளார்.

அந்த வகையில் சமீபத்தில் வெளியான சார்பட்டா பரம்பரை மிகப் பெரிய வெற்றி பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. எந்த கதாபாத்திரத்தையும் விட்டு வைக்காமல் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பார்த்து பார்த்து செதுக்கி உள்ளார்.

இந்த நிலையில் சார்பட்டா பரம்பரை படக்குழுவை நடிகர் கமல்ஹாசன் நேற்று நேரில் சந்தித்து பேசியுள்ளது வைரல் ஆகி வரும் அதே சமயம் இருவரும் புதிய திரைப்படத்தில் இணைய ரகசிய பேச்சுவார்த்தை நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது.

நீண்ட போராட்டத்திற்கு

நீண்ட போராட்டத்திற்கு

இயக்குனர் பா ரஞ்சித் படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளன. வழக்கமான மசாலாக்கள் அடங்கிய கமர்ஷியல் படங்களை இயக்குவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டு சமூகத்திற்கு என்ன தேவையோ அன்று முதல் இன்று வரை சமூகத்தில் மாற்றம் அடையாத சில சமூக அவலங்களை மையப்படுத்தியும் அதேசமயம் ரசிக்கின்ற வகையிலும் தரமான படங்களை இயக்கி வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் சென்னை 28,சரோஜா, கோவா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரஞ்சித் அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அட்டகத்தி நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. வழக்கமான காதல் கதையாக இல்லாமல் அழுத்தம் திருத்தமான காதல் கதையாக அட்டகத்தி வெளியாகி முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் பா ரஞ்சித். இயக்குனர் பா ரஞ்சித் படங்களுக்கு என்றே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளன. வழக்கமான மசாலாக்கள் அடங்கிய கமர்ஷியல் படங்களை இயக்குவதை முற்றிலுமாக தவிர்த்து விட்டு சமூகத்திற்கு என்ன தேவையோ அன்று முதல் இன்று வரை சமூகத்தில் மாற்றம் அடையாத சில சமூக அவலங்களை மையப்படுத்தியும் அதேசமயம் ரசிக்கின்ற வகையிலும் தரமான படங்களை இயக்கி வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் சென்னை 28,சரோஜா, கோவா ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்த ரஞ்சித் அட்டகத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். அட்டகத்தி நீண்ட போராட்டத்திற்கு பிறகு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. வழக்கமான காதல் கதையாக இல்லாமல் அழுத்தம் திருத்தமான காதல் கதையாக அட்டகத்தி வெளியாகி முதல் படத்திலேயே முத்திரை பதித்தார் பா ரஞ்சித்.

மெட்ராஸ்

மெட்ராஸ்

வட சென்னை என்றாலே ரவுடிகளின் கூடாரம், கூவம் என இதுவரை காட்டிக் கொண்டிருந்த சில இயக்குனர்களுக்கு மத்தியில் வடசென்னை உழைக்கும் வர்க்கத்தின் ஓர் அற்புதமான இருப்பிடம் என மெட்ராஸ் படத்தின் மூலம் எடுத்துரைத்து ஒட்டு மொத்த திரையுலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். நன்கு படித்தவர்கள், ஃபுட்பால் உள்ளிட்ட விளையாட்டுகளில் நன்கு தேர்ச்சி பெற்றவர்கள் சுயமரியாதை இழக்காதவர்கள் யாரையும் ஏமாற்றாமல் நன்றியுடன் இருப்பவர்கள் என வடசென்னை மக்களின் பிரதிபலிப்பை மெட்ராஸ் படத்தின் மூலம் காட்டியதோடு இந்தத் திரைப்படமும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.

பல மடங்கு வசூல்

பல மடங்கு வசூல்

இவ்வாறு இரண்டு ஹிட்டுகளை கொடுத்த பா ரஞ்சித் மூன்றாவதாக ஜாக்பாட் அடித்ததுபோல சூப்பர் ஸ்டாரை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. மற்ற இயக்குனர்களாக இருந்திருந்தால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இயக்குவதால் கமர்ஷியல் மசாலாக்களை தூவி விட்டு கல்லா கட்டத்தான் நினைத்திருப்பார்கள். ஆனால் ரஞ்சித் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை இயக்க வாய்ப்பு கிடைத்தும் தனது பாணியிலேயே கபாலி திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் பெரும்பாலும் மலேசிய டானை மையப்படுத்திய படமாக வெளியாகி பல மடங்கு வசூலுடன் சுமாரான வெற்றியைப் பெற்றது.

குத்துச்சண்டை விளையாட்டை

குத்துச்சண்டை விளையாட்டை

கபாலி சறுக்கலுக்கு பிறகும் ரஞ்சித்தின் மீது இருந்த நம்பிக்கை தளராத ரஜினிகாந்த் மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் . மீண்டும் அதே கூட்டணி இணைந்து காலா படத்திலும் பட்டையை கிளப்பி இருந்தார்கள். மும்பையில் உள்ள தாராவி பகுதியில் தமிழ் மக்களின் நிலங்கள் சுரண்டப்படுவதை மையப்படுத்தி உருவான காலா திரைப்படமும் சுமாரான விமர்சனங்களுடன் மிகப்பெரிய வசூலை அள்ளியது.

இதற்கிடையில் தன்னிடம் இருந்த உதவி இயக்குனர்களின் படங்களை தயாரித்து தயாரிப்பாளராகவும் மாறிய ப ரஞ்சித் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. 1970களில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை விளையாட்டையும் அது சார்ந்த பரம்பரைகளையும் தத்ரூபமாக சார்பட்டா படத்தில் காட்டி இருந்தார்.

சார்பட்டா பரம்பரை

சார்பட்டா பரம்பரை

பெரும் எதிர்பார்ப்பில் திரையரங்குகளில் வெளியாக இருந்த சார்பட்டா பரம்பரை கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டதால் ஓடிடியில் வெளியானது. வெளியான நாள் முதலே அனைத்து இடங்களிலும் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதில் ஆர்யா கபிலன் என்ற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடிக்க அவருக்கு ஜோடியாக மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருப்பார். பசுபதி,அனுபமா, ஜான் விஜய், கலையரசன், சந்தோஷ் பிரதப், ஜான் கொக்கேன்,சபீர், தங்கதுரை, காளி வெங்கட், சரவண வேல் என மிகப்பெரிய பட்டாளமே நடித்திருக்க பாரபட்சம் இல்லாமல் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து இயக்கியிருந்தார் பா ரஞ்சித்.

பா ரஞ்சித் இயக்கத்தில் கமல்

பா ரஞ்சித் இயக்கத்தில் கமல்

நடிகர்கள் சூர்யா, கார்த்தி உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் சார்பட்டா பரம்பரை படத்தை பாராட்டி இந்த நிலையில் நேற்று நடிகர் கமல்ஹாசன் திடீரென படக்குழுவை சந்தித்து தன்னுடைய பாராட்டுக்களை தெரிவித்து இருந்தார். தரமான படங்களை பாராட்டுவதை நடிகர் கமல்ஹாசன் எப்போதும் தவிர்த்ததில்லை. அந்த வகையில் சார்பட்டா படக்குழுவையும் அழைத்து நேற்று சந்தித்துவிட்டு ஒருவரையும் தனித்தனியாக பாராட்டி இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகின. நடிகர் கமல்ஹாசனின் இந்த திடீர் வருகைக்கு பின் மற்றுமொரு முக்கியமான செய்தியும் உள்ளதாக தெரியவந்துள்ளது. ஆம் பா ரஞ்சித் அடுத்ததாக முழுக்க முழுக்க காதல் கதை ஒன்றை இயக்க உள்ளார். அதில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் துஷாரா லீட் ரோலில் நடிக்கின்றனர். அதைத்தொடர்ந்து கமல்ஹாசன் நடிக்கும் படத்தை பா ரஞ்சித் இயக்க பேச்சுவார்த்தை இந்த சந்திப்பில் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. நடிகர் கமல்ஹாசன் இப்பொழுது இந்தியன் 2, விக்ரம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். எனவே இவ்விரு திரைப்படத்தையும் முடித்துவிட்டு அடுத்ததாக பா ரஞ்சித் இயக்கத்தில் நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X