என்னங்க சொல்றீங்க.. பிக் பாஸ் 5.. கமல் தொகுத்து வழங்குவாரா இல்லையா.. பரபரக்கும் டிவி உலகம்!

சென்னை : விஜய் டிவி.,யில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோவான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4 சீசன்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் சீசனனின் வெற்றியை தொடர்ந்து, மற்ற 3 சீசன்களையும் கமலே தொகுத்து வழங்கினார்.

வார நாட்களில் பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் நிகழ்வுகளை பார்க்க ஏற்படும் அதே ஆர்வம், கமல் வரும் வார இறுதி நாட்களிலும் ஏற்பட்டது. இதனால் தனது அரசியல் சார்ந்த வருத்துக்களை மக்களிடம் கொண்டு சேர்க்க பிக்பாஸ் மேடையை கமல் பயன்படுத்திக் கொண்டார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் 3 சீசன்களும் ஜூன் மாதத்தில் துவங்கி, செப்டம்பர் மாதத்தில் இறுதி போட்டி நடத்தப்பட்டது. ஆனால் நான்காவது சீசன் கொரோனாவால் தாமதமாக, அக்டோபர் 4 ம் தேதி துவங்கப்பட்டது. ஜனவரி 17 ம் தேதி இறுதிப் போட்டி நடத்தப்பட்டது.

ஜூன் 25 ல் பிக்பாஸ் 5

ஜூன் 25 ல் பிக்பாஸ் 5

இப்போது தான் 4 வது சீசன் முடிந்துள்ளதால் அடுத்த சீசனும் தாமதமாக துவங்குமா அல்லது முதல் சீசன்களை போல் துவங்கப்படுமா என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்தது. ஆனால் மக்கள் மகிழ்ச்சி தரும் விதமாக ஜூன் 25 ம் தேதி பிக்பாஸ் சீசன் 5 துவங்கப்பட உள்ளது.

கமல் பங்கேற்பாரா

கமல் பங்கேற்பாரா

முதல்கட்ட பணிகளை விஜய் டிவி துவங்கி விட்டது. போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது. இருந்தாலும் கமல் பங்கேற்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதே உண்மை.

பிஸியான கமல்

பிஸியான கமல்

காரணம், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிட உள்ளது. இதற்காக பிரச்சாரம், கூட்டணி பேச்சு, வேட்பாளர்கள் தேர்வு ஆகிய பணிகளில் கமல் பிஸியாக இருந்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 5 துவங்குவதற்கு முன்பே தேர்தல் முடிந்து, முடிவுகள் வந்து விடும்.

தேர்தலுக்கு பின் கமல் முடிவு

தேர்தலுக்கு பின் கமல் முடிவு

இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு மக்களின் ஆதரவு கிடைத்து ஆட்சி அமைத்தாலோ அல்லது ஆட்சி அமைக்கும் கூட்டணி பங்கேற்றாலோ பிக்பாஸ் 5 ல் கமல் பங்கேற்க மாட்டார். அவருக்கு பதில் வேறொரு முன்னணி பிரபலம் தான் தொகுத்து வழங்குவார்.இதனால் தேர்தல் முடிவுகளை பொறுத்தே கமல் தொகுத்து வழங்குவது முடிவு செய்யப்படும் என கூறப்படுகிறது.

விரைவில் அப்டேட்

விரைவில் அப்டேட்

இறதி போட்டியாளர்கள் பட்டியல் உள்ளிட்ட மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஏப்ரல் மாதத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் அடுத்தடுத்து பல அப்டேட்கள் வெளிவரவே வாய்ப்பு அதிகம் உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X