For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எம்.ஜி.ஆர். பாராட்டிய கமல்.. வறுத்தெடுக்கும் தலைவர்கள்.. அதையும் தாண்டி வாகை சூடுவாரா..?

By Staff
|

சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் திரையுலகில் தனது ஐம்பத்து ஒன்பது ஆண்டுகளை முடித்து 60வது ஆண்டினுள் கடந்த 12-ம் தேதியன்று காலெடுத்து வைத்துள்ளார். ஒரு மனிதன் அறுபது ஆண்டுகள் ஒரு துறையில் இருப்பது, அதுவும் அந்த துறைக்கே பெருமை சேர்த்தபடி இருப்பதென்பது அசாதாரணமான செயல். அந்த பெரும் சாதனைக்கு சொந்தக்காரர் நம் கமல்! என்பது ஆகப்பெரிய விஷயம்.

வெறும் நடிகனாக மட்டுமில்லாமல் தயாரிப்பாளராக, கதாசிரியராக, வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக, பாடகராக, டப்பிங் ஆர்ட்டிஸ்டாக, நடன பயிற்சியாளராக என்று ஒரு திரைப்படத்தின் அத்தனை டெக்னிக்கல் சைடிலும் பணிபுரியும், அதுவும் மிக வெற்றிகரமாக பணிபுரியும் கலைஞன் நம் கமல். ஹீரோயினாக மட்டும்தான் அவரால் நடிக்க முடியாது! என்பார்கள். அதிலும் அவ்வை சண்முகி விதிவிலக்காகி நிற்கிறது.

will kamal prove mgrs words

இப்படிப்பட்ட கமலைப் பற்றி தமிழக சினிமாத்துறை ஆளுமைகள், அரசியல் வி.வி.ஐ.பி.க்கள் உதிர்த்த வார்த்தைகளின் மிக முக்கியமான துளிகள் இங்கே....

"நடிக்கும்போது இயக்குநர்களின் கையில் வெறும் களிமண்ணாக கமல் என்றுமே இருந்ததில்லை. இயக்குநர்களின் கற்பனையில் இருக்கும் கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுக்கும் கடவுள் அவர். இவர் மட்டும் அமெரிக்காவில் பிறந்திருந்து, ஹாலிவுட்டுக்கு கிடைத்திருந்தால் உலகப்புகழ்

அடைந்திருப்பார்" என்று பாலுமகேந்திரா கூறினார்.

"எதைச் செய்தாலும் அதை முதலில் முழுமையாக கற்று, அதன் பின் அதில் இறங்கி வெற்றி பெறுபவர் கமல்ஹாசன்." என்று சொல்லியவர் பாரதிராஜா.

தியாகி, துரோகி: சிம்பு பற்றி சொல்கிறாரா வெங்கட் பிரபு?

"நீங்கள் கமல்ஹாசனுக்கு என்ன தெரியுமென்று பார்க்காதீர்கள். கமல்ஹாசனுக்கு தெரிந்தவற்றில் ஏதேனும் ஒன்று நமக்கு தெரியுமா? என்று யோசிங்கள்." என்றார் எம்.ஜி.ஆர்.

"கலையில் பரிபூரண தெளிவு பெற்றதால் கமல் ஒரு கலைஞானி" என்றார் கருணாநிதி.

இப்படி பெரும் ஆளுமைகள் அத்தனை பேரும் திரையுலக கமல்ஹாசனை மிக மிக உன்னதமான வார்த்தைகளினால் பாராட்டி தள்ளியுள்ளனர். அப்பேர்ப்பட்ட கமல் சினிமா தாண்டி, இப்போது அரசியலிலும் நுழைந்துள்ளார். அவரை ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார் போன்ற அரசியல் வித்தகர்கள் கலாமாஸ்டர் ரேஞ்சுக்கு வெச்சு கிழிக்கின்றனர்.

இந்த விமர்சன கற்கள் கமலை காயப்படுத்துகின்றனவா, அல்லது அக்கற்களை அடுக்கி அவற்றின் மேலேறி அவர் தமிழக முதல்வர் நாற்காலியை பிடிக்கிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்..!

- ஜி.தாமிரா

English summary
Late MGR praised and lauded Kamal Haasan but nowadays many leaders in ADMK are criticizing him. Will the actor turned political, prove himself despite the stiff opposition?.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more