'பிகிலு'க்குப் பிறகு.. விஜய்யுடன் மீண்டும் மோதுகிறார் கார்த்தி? பொங்கல் ரேஸில் மாஸ்டர், சுல்தான்!

By

சென்னை: பொங்கலுக்கு விஜய்யின் மாஸ்டர் படமும் கார்த்தியின் சுல்தான் படமும் ரிலீஸ் ஆக உள்ளதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்திருக்கிறார் விஜய். இதில் விஜய் சேதுபதி வில்லன்.

மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடித்திருக்கிறார். சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. அந்த நேரத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாஸ்டர் உள்பட பல படங்களின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. கொரோனா அச்சுறுத்தலால் சுமார் 7 மாதத்துக்கும் மேலாக எந்தவொரு புதிய படமும் தியேட்டரில் வெளியாகவில்லை.

சூரரைப் போற்று

சூரரைப் போற்று

இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடத் திட்டமிடப்பட்ட படங்கள் எதுவுமே வெளியாகவில்லை. இதனால், தயாரிப்பாளர்களுக்கு பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. பல படங்கள் ஓடிடியில் வெளியாகியுள்ளன. நடிகர் சூர்யாவின், சூரரைப் போற்று படம், வரும் 31
ஆம் தேதி அமேசானில் வெளியாகிறது.

தியேட்டரில் மாஸ்டர்

தியேட்டரில் மாஸ்டர்

இந்நிலையில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படம் தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும் என்று படக்குழு உறுதியாகத் தெரிவித்தது. தியேட்டர்கள் இப்போது திறக்கப்பட்டாலும் பண்டிகை காலங்களில் வெளியிட்டால்தான், வசூல் அள்ளலாம் என்பதால், மாஸ்டரை
பொங்கலுக்கு வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

சுல்தானும் ரிலீஸ்

சுல்தானும் ரிலீஸ்

பொங்கலுக்கு சோலோ படமாக, மாஸ்டர் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கார்த்தியின் சுல்தான் படமும் அதே நாளில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கி உள்ளார். இவர் சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் நடித்த ரெமோ படத்தை இயக்கியவர்.

பிகில், கைதி

பிகில், கைதி

ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார். இதன் ஷூட்டிங் நேற்று முடிந்துள்ளது. ஏற்கனவே, கடந்த தீபாவளிக்கு விஜய்யின் பிகில் படமும் கார்த்தியின் கைதி படமும் ரிலீஸ் ஆகின. இரண்டு படமும் ஹிட்டானது. அதைப் போல இப்போதும் விஜய்- கார்த்தி இருவரும் தியேட்டரில் மோதப் போவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

லோகேஷ் கனகராஜ்

லோகேஷ் கனகராஜ்

சுல்தான் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, ஷூட்டிங் முடிந்துவிட்டது, பண்டிகை வெளியீட்டுக்கு காத்திருக்கிறேன் என்று ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதால், இந்த இரண்டு படங்களும் 2021-ம் ஆண்டு பொங்கல் விடுமுறைக்கு வெளியாகும் என்பது உறுதியாகி உள்ளது. கடந்த தீபாவளிக்கு விஜய்யுடன் மோதிய 'கைதி'யை லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இப்போது 'மாஸ்டரை' லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X