சிவகார்த்திகேயனுடன் மோதும் கார்த்தி.. கைதியாக அசத்தியவர் ’தம்பி’யாக வருகிறார்!
சென்னை: பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா, கார்த்தி நடித்து வரும் படத்திற்கு தம்பி என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தம்பி படத்தின் முழு பணிகளும் நிறைவடைந்து விட்டதாகவும், வரும் டிசம்பர் 20ம் தேதி ரிலீசாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த படத்தில் ஜோதிகா, கார்த்தியுடன் நடிகர் சத்யராஜ், அம்மு அபிராமி மற்றும் நிகிலா விமல் நடித்து வருகின்றனர்.
மாதவன் பட டைட்டில்
சீமான் இயக்கத்தில் மாதவன், பூஜா நடிப்பில் கடந்த 2005ம் ஆண்டு வெளியான தம்பி படம் மாதவனை ஆக்ஷன் ஹீரோவாக்கியது. தற்போது, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா, கார்த்தி நடித்து வரும் படத்திற்கு ‘தம்பி' என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணியுடன்
அண்ணன் சூர்யாவின் மனைவி, அண்ணி ஜோதிகாவுடன் கார்த்தி முதன் முறையாக இந்த படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் கார்த்திக்கு சிறப்பு தோற்றமா அல்லது, படம் முழுவதும் வருவாரா என்ற விவரம் படம் வெளியான பிறகு தான் தெரியவரும். அண்ணியுடன் நடிச்சாச்சு, அடுத்து அண்ணன் சூர்யாவுடன் எப்ப பாஸ் படம் பண்ணுவீங்க..

எதுக்கு வெயிட்டிங்
பாபநாசம் படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம் காமெடி கலந்த கிரைம் த்ரில்லராக உருவாகி வருகிறதாம். படத்தின் மொத்த பணிகளும் நிறைவடைந்து விட்டதாகவும், சூர்யாவின் சூரரை போற்று அறிவிப்பு இன்னும் மூன்று நாட்களில் வெளியான பிறகு, கார்த்தியின் தம்பி படம் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

96 மேஜிக்
விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 96 படத்தின் அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்திலும் 96 படத்திற்கு இசையமைத்த கோவிந்த வசந்தா தான் இசையமைப்பாளர். அதனால், 96 மேஜிக் மீண்டும் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஹீரோவுடன் மோதல்
தீபாவளி ரேசில் விஜய்யின் பிகில் திரைப்படத்துடன் கார்த்தியின் கைதி படம் போட்டியிட்டது. அதே போல, வரும் டிசம்பர் 20ம் தேதி சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்துடன் கார்த்தியின் தம்பி மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. சிவகார்த்திகேயன் படத்தின் டீசர், பாட்டு எல்லாம் வெளியாகி விட்டது. ஆனால், கார்த்தி படத்தின் அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











