லியோ தமிழ்நாட்டு வசூல் சாதனையை முறியடிக்குமா கருப்பு?.. இப்போதே இத்தனை கோடி வசூல் சாதனை!

சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை அதிகப்படியான வசூல் சாதனையை விஜய் நடித்த லியோ திரைப்படம் தான் பெற்றுள்ளது என பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லியோ திரைப்படம் அதிகபட்சமாக 232 கோடி வசூலை தமிழ்நாட்டில் மட்டும் ஈட்டியுள்ளது என்கின்றனர்.

இந்நிலையில், அந்த வசூல் சாதனையை கருப்பு திரைப்படம் முறியடிக்குமா என்கிற கேள்வி தற்போது சக்தி ஃபிலிம் ஃபேக்டரி வெளியிட்ட எக்ஸ் தள போஸ்ட்டால் கிளம்பி உள்ளது.

Will Karuppu beat Leo or Jailer Tamil Nadu Box Office Records
Photo Credit:

கருப்பு திரைப்படம் உலகளவில் சுமார் 300 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், தமிழ்நாட்டின் வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது.

கருப்பு உலக வசூல்: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா, நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, இந்திரன்ஸ் நடிப்பில் கடந்த மே 15ம் தேதி வெளியான கருப்பு திரைப்படம் மே 27ம் தேதி வரை உலகளவில் 302 கோடி முதல் 308 கோடி வரை வசூல் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இதுவரை தயாரிப்பு நிறுவனம் கருப்பு படத்தின் உலக வசூல் 300 கோடி கடந்ததாக வசூல் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தமிழ்நாட்டில் 150 கோடி வசூல்: ஓவர்சீஸில் மட்டுமே கருப்பு திரைப்படம் 120 கோடி வசூலை கடந்து விட்டதாக முதல் வாரத்திலேயே தகவல்கள் வெளியாகின. தமிழ்நாட்டில் மட்டும் கருப்பு திரைப்படம் அதிகபட்சமாக 150 கோடி வசூலை கடந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக சக்தி ஃபிலிம் ஃபேக்டரி தற்போது அறிவித்துள்ளது. மேலும், 200 கோடி வசூலை தமிழ்நாட்டிலேயே கருப்பு படம் பெறும் என்கிற நம்பிக்கையையும் அது தெரிவித்துள்ளது.

ஜெயிலர், லியோ சாதனையை முறியடிக்குமா?: உலகளவில் ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் விஜய் நடித்த லியோ படங்கள் 600 கோடி வசூலை கடந்தன. மேலும், தமிழ்நாட்டில் லியோ திரைப்படம் 232 கோடி வசூலை ஈட்டியுள்ளதாகவும் ஜெயிலர் திரைப்படம் 191 கோடி வசூலை ஈட்டியுள்ளதாக தகவல்கள் உள்ளன. இந்நிலையில், இதில், கருப்பு திரைப்படம் எந்த சாதனையை முறியடிக்கப்போகிறது என்பது இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்து விடும் என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X