Karuppu Box Office: விக்ரம் வசூலை முறியடிப்பாரா ரோலக்ஸ் சூர்யா.. கருப்பு இந்த சன் டேவும் செம!
சென்னை: அர்ஜுனின் பிளாஸ்ட் திரைப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று ஒரு பக்கம் ஓடிக்கொண்டிருந்தாலும் சூர்யாவின் கருப்பு திரைப்படமும் இந்த வாரமும் பாக்ஸ் ஆபீஸில் வெறித்தனமாக சாமியாட்டம் ஆடியுள்ளது.
3வது ஞாயிற்றுக்கிழமையான நேற்றும் கருப்பு திரைப்படம் தமிழ்நாட்டில் சுமார் 6 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி கெத்துக் காட்டியுள்ளது.

சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வசூலை சூர்யாவின் கருப்பு படம் முந்திய நிலையில், அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் 400 கோடி ரூபாய் வசூலை முறியடிக்குமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
கர்ஜிக்கும் கருப்பு: கங்குவா, ரெட்ரோ படங்களில் சூர்யா டெமி காடாக நடித்தும் அந்த படங்கள் பெரிதாக ஓடவில்லை. இந்நிலையில், எல்லைச்சாமியான கருப்பசாமியாக சூர்யாவை ஆர்ஜே பாலாஜி நடிக்க வைத்து ரசிகர்களை தியேட்டர்களில் சாமியாட வைத்தார். அதன் விளைவு தொடர்ந்து 3வது ஞாயிற்றுக்கிழமையும் கருப்பு பாக்ஸ் ஆபீஸில் கர்ஜித்து கல்லா கட்டி வருகிரது. இப்படியொரு வெற்றியை சூர்யா பல ஆண்டுகளாக தவறவிட்டு வந்த நிலையில், சரியான நேரத்தில் ஆர்ஜே பாலாஜி சம்பவம் செய்து மீண்டும் சூர்யாவை அவரது அரியணையில் அமர வைத்துள்ளார். அயன், சிங்கம் படமெல்லாம் ஒரு காலத்தில் பாக்ஸ் ஆபீஸில் சூர்யாவை மிகப்பெரிய உச்சிக்கு கொண்டு சென்றது குறிப்பிடத்தக்கது.
ரோலக்ஸ் போல கேமியோக்கள்: விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் கிளைமேக்ஸில் சூர்யா சில நிமிடங்களே கேமியோவாக நடித்து மிரட்டியிருப்பார். அவரது காட்சிகள் படத்திற்கும் எல்சியூவுக்கும் மிகப்பெரிய ஹைப்பை ஏற்படுத்தி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தது. இந்நிலையில், கருப்பு படத்தில் சிங்கம் சூர்யா மற்றும் என்ஜிகே சூர்யா என சூர்யாவே தனது படத்துக்கு கேமியோ ரோலில் நடித்து கருப்பு படத்தை மெகா பிளாக்பஸ்டர் ஆக மாற்றியுள்ளார்.
விக்ரம் வசூலை முந்துமா?: கருப்பு திரைப்படம் 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூலை ஈட்டியதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சாக்னிக் உள்ளிட்ட தளங்கள் உலகளவில் கருப்பு திரைப்படம் 17 நாட்களில் 289 கோடி ரூபாய் தான் வசூல் ஈட்டியதாக தெரிவிக்கின்றன. இந்நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை 17வது நாளிலும் கருப்பு திரைப்படம் சுமார் 6.79 கோடி ரூபாய் வசூல் ஈட்டியதாக அறிவித்துள்ளனர். ஜூன் மாதம் ஜன நாயகன் வெளியாகும் பட்சத்தில் தான் கருப்பு படத்தின் வசூல் குறையும் என்கின்றனர். ஆனால், இதுவரை ஜன நாயகன் படத்துக்கு ஏன் சென்சார் கிடைக்கவில்லை. எப்போது ரிலீஸ் என எந்தவொரு தகவலும் இல்லாத நிலையில், இந்த மாதமும் கருப்பு தொடர்ந்து இதே வேகத்தில் சென்றால் விக்ரம் பட வசூலை முறியடிக்கவும் வாய்ப்பு இருக்கு என்கின்றனர். ஆனால், அதிகபட்சம் கருப்பு திரைப்படம் 350 கோடி வரை வசூல் ஈட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications