Karuppu: சொந்தகாரங்களை நம்பாத சூர்யா அண்ணா.. கண்ணீரில் அன்பான ஃபேன்ஸ்.. கருப்பு ரிலீஸ் ஆகுமா?

சென்னை: மொத்த கோலிவுட்டும் டோலிவுட்டும் பரபரப்பாக பேசிக் கொண்டிருப்பது சூர்யாவின் கருப்பு படம் ரிலீஸ் ஆவதில் ஏற்பட்ட சிக்கல் குறித்துதான். படத்தை வெளியிடக்கூடாது என்று யாரும் வழக்கு போடாத நிலையில், படத்தை ரிலீஸ் செய்வதில் என்ன பிரச்னை என்று பலருக்கும் புரியாமல் விவாதித்துக் கொண்டு உள்ளனர். ஒரு பக்கம், சூர்யா தான் இந்த நிலைக்கு எல்லாம் காரணம் என்று பலரும் கூறி வருகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் சூர்யா ரசிகர்கள் படம் வெளியாகாத ஏமாற்றத்தில் வருத்ததின் உச்சத்தில் உள்ளனர்.

இப்படி இருக்கையில், சூர்யா ரசிகர்கள், இணையவாசிகள் பலரும் சூர்யாவின் இந்த நிலைக்கு காரணம் அவரது தயாரிப்பாளர்களான உறவுக்காரர்கள் தான் என்று விளாசி வருகிறார்கள். அதாவது, ரசிகர் ஒருவர் கூறுகையில், " சூர்யா அண்ணா உனது சினிமா கேரியர் இந்த அளவுக்கு மோசமாக மாற காரணமே நீங்கள் தொடர்ந்து உங்கள் சொந்தக்கார தயாரிப்பாளர்களுடன் இணைந்து படம் செய்வதால் தான். இதுவே நீங்கள் வெளி தயாரிப்பாளருக்கு படம் செய்திருந்தால் நீங்களும் இப்படி மோசமான நிலையில் இருக்க மாட்டீர்கள், நாங்களும் இப்படி நடுத்தெருவில் இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்காது என்று விளாசி உள்ளார்.

Fans of Suriya blamed family-linked producers after Karuppu faced shocking release troubles and unclear updates from the production team
Photo Credit:

சொந்தக்காரர்களை நம்பி: அதேபோல், எக்ஸ் பக்கத்தில் இணைய வாசி ஒருவர், " சொந்தக்காரன நம்பி சொந்த கெரியரையே அழிச்சிக்கிட்டவன இப்போ தான் டா ஃபர்ஸ்ட் டைம் பார்க்குறேன்" என்ற மீம் டெம்ப்ளேட்டை பகிர்ந்து, சூர்யாவை டேக் செய்துள்ளார். சூர்யா தொடர்ந்து தனது 2டி நிறுவனம், ஸ்டுடியோ க்ரீன், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு தான் மாற்றி மாற்றி படம் செய்கிறார் என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தி மீதும் இருக்கிறது. கங்குவா படம் ஸ்டூடியோ க்ரீன் தயாரித்தது. ரெட்ரோ படத்தை கார்த்திக் சுப்பராஜ் உடன் இணைந்து சூர்யாவே தயாரித்தார். தற்போது ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கருப்பு படத்தை தயாரித்துள்ளனர்.

Fans of Suriya blamed family-linked producers after Karuppu faced shocking release troubles and unclear updates from the production team
Photo Credit:

ஃபேமிலி தயாரிப்பாளர்கள்: ஸ்டுடியோ க்ரீனின் ஞானவேல் ராஜா, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் எஸ்.ஆர். பிரபு உள்ளிட்டவர்கள் சூர்யாவின் மிக நெருங்கிய உறவுக்காரர்கள் அதனால் தான் சூர்யா தொடர்ந்து தனது உறவுக்காரர்கள் உடனே படம் செய்து கொண்டு இருக்கிறார் என்ற விமர்சனம் தொடர்ந்து முன் வைக்கப்படுகிறது. தொடக்கத்தில் இவர்கள் கூட்டணி ஒர்க் அவுட் ஆனாலும் அதன் பின்னர் பெரிய அளவில் வெற்றிகளை ஈட்டித் தரவில்லை. கருப்பு படம் சூர்யாவுக்கு கம் பேக் படமாக இருக்கும் என்று பலரும் நம்பிக்கொண்டு இருந்த நிலையில், ரசிகர்கள் ஆசையில் மண்ணைப் போடும் விதமாக படம் வெளியாவதில் சிக்கல் என்ற தகவல் பரவி வருகிறது. தயாரிப்பு நிறுவனமும், முறையான விளக்கங்களைக் கொடுக்காமல், காலை 9 மணி காட்சி மட்டும் கேன்சல் என்று தெரிவித்தது ரசிகர்களின் கோபத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளது. ரசிகர்கள் பலருமே சூர்யாவிடம் வேண்டுகோள் வைப்பது, வெளி தயாரிப்பாளருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என்பதுதான்" என்று கூற் வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X