Karuppu: கருப்பனுக்கே சோதனையா? ரிலீஸ் ஆகுமா ஆகாதா? தயாரிப்பாளர் என்னங்க இப்படி சொல்லிட்டாரு
சென்னை: சூர்யா, த்ரிஷா நடிப்பில் உருவாகி உள்ள படம் கருப்பு. இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்க, எஸ்.ஆர். பிரபுவின் ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். படம் மே 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று ஏற்கனவே படக்குழு தெரிவித்து, ப்ரோமோசன் வேலைகளை சிறப்பாக செய்து வந்தது. இப்படி இருக்கையில் படம் இன்று வெளியாகாது என்ற நிலை உருவாகி உள்ளது. நிதி நெருக்கடியால் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளாதாக பேச்சுக்கள் திரை உலகில் இருந்தாலும், தயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு தனது எக்ஸ் பக்கத்தில் படத்துன் 9 மணி காட்சிகள் திரையிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, ரசிகர்கள் அதற்காக எங்களை மன்னிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இவரது இந்த போஸ்ட் ஒரு புறம் இருக்க, புக் மை ஷோ, டிஸ்ட்ரிக்ட் உள்ளிட்ட ஆப்களில் படத்தின் புக்கிங் பெருமளவு நிறுத்தப்பட்டுவிட்டது. மல்டி ஸ்கீரீன் தியேட்டர்களில் படத்தின் புக்கிங் நிறுத்தப்பட்டு, சிங்கிள் ஸ்கீரின் தியேட்டர்களில் மட்டும் படத்தின் புக்கிங் நடைபெற்று வருகிறது. வெளிநாடுகளில் அடுத்த ஒரு வாரத்திற்கான கருப்பு பட காட்சிகள் அனைத்தும் கேன்சல் செய்யப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் சூர்யா ரசிகர்களை மொத்தமாக அப்செட் ஆக்கிவிட்டது.


Click it and Unblock the Notifications