கட்டா குஸ்தி 2 ஓடுமானு கேட்ட விஷ்ணு விஷால்.. எல்லாத்துக்கும் ரெடியாதான் இருக்காரு போல!
சென்னை: கட்டா குஸ்தி 2 படம் வெளியாகி உள்ளது. படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் படம் ஜூலை 3ஆம் தேதி வெளியாகி உள்ளது. முன்னதாக படத்தின் மீரிமியர் ஷோ சென்னையில் உள்ள சத்யம் திரையரங்கில் ஜூலை 2ஆம் தேதி மாலை திரையிடப்பட்டது. அப்போது படம் பார்த்து முடித்தவர்களைச் சந்தித்த விஷ்ணு விஷால் படம் எப்படி உள்ளது? உங்களுக்கு பிடித்துள்ளதா? படம் ஓடுமா என சிரித்துக் கொண்டே கேட்டது தொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. படம் ஒரு பக்கா ஃபேமிலி எண்டர்டைனர் என்று படம் பார்த்த பலரும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, கர்ணாஸ், கருணாகரன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் வெளியாகியுள்ளது. முதல் பாகம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக உருவான இந்த படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், படத்தின் பிரீமியர் காட்சிக்கு பிறகு ரசிகர்களிடம் விஷ்ணு விஷால் கேட்ட கேள்வி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
படம் வெளியாகும் முன்னதாக, ஜூலை 2ஆம் தேதி மாலை சென்னை சத்யம் திரையரங்கில் 'கட்டா குஸ்தி 2' திரைப்படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்டது. இதில் படக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் கலந்து கொண்டு படத்தை பார்த்தனர்.

படம் முடிந்ததும் திரையரங்கை விட்டு வெளியே வந்த ரசிகர்களை நேரில் சந்தித்த விஷ்ணு விஷால், "படம் எப்படி இருக்கு? பிடிச்சிருக்கா? படம் ஓடுமா?" என்று சிரித்துக் கொண்டே கேட்டார். அதற்கு படம் மிகவும் நன்றாக இருப்பதாகவும், கண்டிப்பாக பெரிய வெற்றி பெறும் என்றும் உற்சாகமாக பதிலளித்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
பாராட்டு: விஷ்ணு விஷால் ரசிகர்களிடம் மிகவும் இயல்பாக பேசிய விதமும், எந்தவித பந்தாவும் இல்லாமல் நேரடியாக கருத்து கேட்ட விதமும் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ஒரு நடிகராக மட்டுமில்லாமல், தயாரிப்பாளராகவும் படத்தின் வெற்றியை எதிர்பார்த்து ரசிகர்களின் விமர்சனத்தை நேரடியாக தெரிந்து கொண்டதை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
படக்குழு மகிழ்ச்சி: அதுமட்டுமில்லாமல், படம் பார்த்த ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் தங்களது முதல் விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர். குறிப்பாக, 'கட்டா குஸ்தி 2' ஒரு பக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக உருவாகியுள்ளதாகவும், காமெடி, சென்டிமென்ட், ஆக்ஷன் என அனைத்து அம்சங்களும் சரியான அளவில் இருப்பதாகவும் எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியாக உள்ளனர்.


Click it and Unblock the Notifications