திருமணத்திற்கு பிறகு மஞ்சுவுக்கு ஏற்பட்ட அதே கதி நடிகை காவ்யா மாதவனுக்கும்?
திருவனந்தபுரம்: திருமணத்திற்கு பிறகு மஞ்சு வாரியருக்கு ஏற்பட்ட அதே கதி தான் நடிகை காவ்யா மாதவனுக்கும் ஏற்படுமோ என ரசிகர்கள் அஞ்சுகிறார்கள்.
மலையாள நடிகர் திலீப் நடிகை காவ்யா மாதவனை கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி கொச்சியில் வைத்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு காவ்யா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது இல்லை.
காவ்யா சமூக வலைதளங்கள் பக்கம் வருவதையும் நிறுத்திவிட்டார்.

ரசிகர்கள்
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பது இல்லை என்று காவ்யா முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திலீப்பை மணந்த பிறகு காவ்யா அடியோடு மாறியிருப்பது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.

காவ்யா
திலீப்பின் முதல் மனைவி மஞ்சு வாரியரும் திருமணத்திற்கு பிறகு நடிக்காமல் வீட்டோடு முடங்கிவிட்டார். தற்போது காவ்யா மாதவனுக்கும் அதே கதி தான் ஏற்படுமோ என ரசிகர்கள் அஞ்சுகிறார்கள்.

ஃபேஸ்புக்
திருமணத்திற்கு இரண்டு நாட்கள் முன்பு தான் காவ்யா கடைசியாக ஃபேஸ்புக் பக்கம் வந்தார். விருது விழாக்களுக்கு கூட அவர் வருவது இல்லை. காவ்யா தொடர்ந்து நடிப்பார் என்று நம்பிய ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மஞ்சு
மலையாள திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்தபோது 1998ம் ஆண்டில் திலீப்பை மணந்தார் மஞ்சு வாரியர். திலீப்பை பிரிந்த பிறகே அவர் மீண்டும் நடிக்க வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











