தனுஷுக்கு ஜோடியாகிறாரா கீர்த்தி ஷெட்டி?

ஹைதராபாத் : ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்து இப்பொழுது ஒட்டுமொத்த தென்னிந்திய ரசிகர்களின் கனவு கன்னியாக இருப்பவர் நடிகை கீர்த்தி ஷெட்டி.

Recommended Video

Uppena Review | VijaySethupathi, VaishnavTej, Krithi Shetty, BujjiBabu Sana | Netflix

தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் கிடைத்த மிகப்பெரிய வரவேற்பு அடுத்து விஜய் சேதுபதி வில்லனாக நடித்திருந்த உப்பென்னா படத்தில் மகளாக நடித்திருப்பார்.

தற்போது தொடர்ந்து படங்களில் ஒப்பந்தமாகி வரும் கீர்த்தி செட்டி தனுஷ் திரைப்படத்தில் நடிப்பதாக பரவிய தகவல் பற்றி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

100 கோடிக்கு மேல்

100 கோடிக்கு மேல்

காரசாரமான மசாலா படங்களுக்கு பெயர் போன தெலுங்கு சினிமாவில் அவ்வப்போது தரமான திரைப்படங்கள் வெளியாகி வெற்றியும் பெற்று வருகிறது. அந்த வகையில் சென்ற ஆண்டு மிகக்குறைந்த பட்ஜெட்டில் உருவான உப்பென்னா திரையரங்குகளில் சக்கை போடு போட்டு சுமார் 100 கோடிக்கு மேல் வசூலை அள்ளியது. இதில் ஹீரோயினாக கீர்த்தி செட்டி அறிமுகமானார்.

உப்பென்னா

உப்பென்னா

ரித்திக் ரோஷனின் சூப்பர் 30 படத்தில் கூட்டத்தோடு கூட்டமாக சில காட்சிகளில் வந்து சென்ற இவர் பல விளம்பரப் படங்களிலும் நடித்துள்ளார். உப்பென்னா மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து தற்பொழுது டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் இவருக்கான மார்க்கெட் மிக அதிக அளவிலேயே உள்ளது.

உறுதியாகி உள்ளது

உறுதியாகி உள்ளது

இந்தநிலையில் தனுஷின் மாரி பாகம் 1 மற்றும் 2 தொடர்ந்து மீண்டும் பாலாஜி மோகன் உடன் இணைந்து பணியாற்றுவது உறுதியாகி உள்ளது. இதில் கதாநாயகியாக நடிகை கீர்த்தி செட்டி நடிக்கவிருப்பதாக தகவல்கள் உலா வந்த நிலையில் தமிழ் ரசிகர்கள் செம குஷி ஆகினர். ஆனால் இதுபற்றிய எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகாத நிலையில் தற்பொழுது கீர்த்தி செட்டி ட்விட்டர் பக்கத்தில் தான் நடித்துவரும் படங்களைப் பற்றிய முழு விவரத்தையும் பகிர்ந்துள்ளார்.

கண்டிப்பாக அப்டேட் செய்கிறேன்

கண்டிப்பாக அப்டேட் செய்கிறேன்

அதன்படி லிங்குசாமி இயக்கத்தில் ராம் நடிக்கும் திரைப்படம், நானியின் ஷியாம் சிங்கா ராய் மற்றும் சுதீர் பாபு நடிக்கும் புதிய திரைப்படம் என இப்போதைக்கு மூன்று திரைப்படங்களில் மட்டுமே நடித்து வருகிறேன். வேறு இந்தப் படங்களில் மட்டுமே நான் கவனம் செலுத்த உள்ளேன். வேறு எந்த ஹீரோக்களின் படங்களிலும் ஒப்பந்தம் ஆகவில்லை தேவையில்லாத வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். புது படங்களில் ஒப்பந்தம் ஆனால் கண்டிப்பாக அப்டேட் செய்கிறேன் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Read more about: dhanush
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X