மகேஷ் பாபு படம் முடித்த கையோடு விஜய்யுடன் ஜோடி சேர்கிறாரா கீர்த்தி சுரேஷ்.. பரபரக்கும் கோலிவுட்!

சென்னை: மீண்டும் நடிகர் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் ஜோடி சேரப் போவதாக கோலிவுட்டில் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

ரஜினிகாந்தின் அண்ணாத்த மற்றும் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

கொரோனா வைரஸ் தொடர்பான வீடியோவையும் சமீபத்தில் வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்.

பூஜா ஹெக்டே ஜோடி

பூஜா ஹெக்டே ஜோடி

கோலமாவு கோகிலா, டாக்டர் உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார் தளபதி விஜய். டோலிவுட், பாலிவுட் என கலக்கி வரும் புட்டபொம்மா நடிகை பூஜா ஹெக்டே இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ளார். கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

தளபதி 66 இயக்குநர்

தளபதி 66 இயக்குநர்

லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் நடைபெறாத நிலையில், தளபதி 66 படத்திற்கான கதையை நடிகர் விஜய் கேட்டுள்ளதாகவும், தெலுங்கு திரைப்பட இயக்குநர் வம்சி படிப்பலி அந்த படத்தை இயக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழில் கார்த்தியின் தோழா படத்தையும் தெலுங்கில் மகேஷ் பாபுவின் மகரிஷி படத்தையும் இயக்கியவர் இவர்.

மீண்டும் கீர்த்தி சுரேஷ்

மீண்டும் கீர்த்தி சுரேஷ்

இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 66 படத்தில் நடிகர் விஜய்க்கு இரண்டு ஹீரோயின்கள் என்றும், நடிகை கீர்த்தி சுரேஷ் மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வைரலாகி வருகின்றன. ரஜினிகாந்தின் அண்ணாத்த மற்றும் மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா மற்றும் செல்வராகவன் உடன் இணைந்து சாணிக் காயிதம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ்.

ஒல்லி பெல்லியாக

ஒல்லி பெல்லியாக

பாலிவுட் படத்திற்காக உடல் எடையை குறைத்து ரொம்பவே மெலிந்து போன கீர்த்தி சுரேஷ், மீண்டும் மகேஷ் பாபுவின் படத்திற்காக தனது உடல் எடையை கூட்டினார். தளபதி விஜய்க்கு ஜோடியாக நடிக்க உள்ள படத்திலும் அதே உடல் எடையை மெயின்டெயின் பண்ண தினமும் உடற்பயிற்சி மற்றும் யோகா செய்து வருகிறாராம்.

Recommended Video

Keerthy Suresh Lockdown குசும்பு | Teacherஐ கலாய்த்து Video | Annathe
100 கோடி கிளப்

100 கோடி கிளப்

ஏற்கனவே தளபதி விஜய்யுடன் இணைந்து பைரவா மற்றும் சர்கார் உள்ளிட்ட படங்களில் நடிகை கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருந்தார். அந்த இரு படங்களுமே நல்ல வசூலை ஈட்டி 100 கோடி கிளப்பில் இணைந்தன. இந்நிலையில், மீண்டும் விஜய்யுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போகிறார் என்கிற தகவல் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தி உள்ளது.

இன்னொரு ஹீரோயின்

இன்னொரு ஹீரோயின்

தளபதி 66 படத்தில் இரண்டு ஹீரோயின்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கப் போவதாக உறுதியான தகவல்கள் வந்துள்ள நிலையில், இன்னொரு ஹீரோயின் கதாபாத்திரத்திற்கு நடிகை மாளவிகா மோகனன் முயற்சித்து வருவதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன. சமீபத்தில், மீண்டும் விஜய்யுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X