’ஆதிபுருஷ்’ படத்தில் பிரபாஸ்-க்கு ஜோடி இவர் தானா? வைரலாகும் தகவல்.. ஆனா அந்த ஒரு பிரச்சனை இருக்கே?

சென்னை: நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகவுள்ள 'அதிபுருஷ்' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அண்மையில் வெளியானது.

மேலும், அந்த படம் ராமாயணம் இதிகாசத்தை மையப்படுத்தி உருவாகிறது என்ற செய்தி வெளியானதும், ராமர் பிரபாஸ்-க்கு சீதையாக யார் நடிக்கப் போறாங்க என்ற கேள்வியும் கூடவே எழுந்துள்ளது.

நடிகை கீர்த்தி சுரேஷ் சீதையாக நடிப்பார் என்ற தகவலும் தற்போது தீயாய் பரவி வருகிறது.

இந்திய இதிகாசம்

இந்திய இதிகாசம்

'ஆதிபுருஷ்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலேயே, ராமர், வில், அனுமான் கதாபாத்திரங்கள் மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய இதிகாசத்தை தழுவி எடுக்கப்படும் பிரம்மாண்டமான படம் என இந்த படம் ராமாயணத்தை மையமாக வைத்து தான் எடுக்கப்படுகிறது என்பதற்கான அனைத்து அடையாளங்களும் இடம்பெற்றுள்ளன.

ராமராக பிரபாஸ்

ராமராக பிரபாஸ்

பாகுபலியாக நடித்து அசத்திய நடிகர் பிரபாஸ் அடுத்து ராமராக இந்த ‘ஆதிபுருஷ்' படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. தான்ஹாஜி படத்தை இயக்கிய ஓம் ராவத் இந்த படத்தை இன்னும் பிரம்மாண்டமாக இயக்கவுள்ளார். ராமர் கோயில் கட்ட அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், ராமாயணம் படத்தின் மீது இந்தியளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகி வருகிறது.

சர்வதேச அளவில்

சர்வதேச அளவில்

உலகளவில் இந்தியர்களும் இந்து மக்களும் உள்ள நிலையில், ‘ஆதிபுருஷ்' படத்தை பான் இந்தியா படமாக மட்டும் அல்லாமல், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளிலும் டப் செய்யப்பட்டு ஒரே சமயத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. 3டி தொழில்நுட்பத்தில் தயாராக உள்ள இந்த பிரம்மாண்ட படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட இந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

சீதை யார்?

சீதை யார்?

ராமராக பிரபாஸ் நடிக்கிறார் என்றதுமே இந்த படத்தில் சீதையாக நடிக்கப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு வெளியான ராம ராஜ்யம் படத்தில் பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா சீதாவாக நடித்து இருந்தார். இந்நிலையில், இந்த படத்தில் சீதையாக எந்த நடிகை நடித்தால் நல்லா இருக்கும் என்ற விவாதமே ரசிகர்கள் மத்தியில் எழுந்து வருகிறது.

வைரலாகும் தகவல்

வைரலாகும் தகவல்

இந்நிலையில், தற்போது நடிகை கீர்த்தி சுரேஷ் தான் ‘ஆதிபுருஷ்' படத்தில் பிரபாஸ்-க்கு ஜோடியாக சீதையாக நடிக்க உள்ளார் என்றும் அவரிடம் இது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் ஒரு தகவல் வைரலாகி வருகிறது. ஆனால், இதுவரை படக்குழு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த பிரச்சனை

அந்த பிரச்சனை

ஆனால், பான் இந்திய படமாக உருவாக உள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் சீதாவாக நடித்தால், பாலிவுட் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் எப்படி விற்பனை ஆகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ராஜமெளலி இயக்கி வரும் ஆர்.ஆர்.ஆர் படத்திற்கு இதே காரணத்திற்காகத் தான் ஆலியா பட்டை புக் செய்திருந்தார். சாஹோ படத்தில் ஷ்ரத்தா கபூரும், நாக் அஸ்வின் - பிரபாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தில் தீபிகா படுகோனேவும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ராவணன்

ராவணன்

'ஆதிபுருஷ்' திரைப்படம் ராமாயணக் கதையாக இருந்தால், சீதா வேடம் மட்டுமல்ல, ராவணன் யார் என்ற கேள்வியும், அனுமன் தொடங்கி ஏகப்பட்ட பெரிய பெரிய கதாபாத்திரங்களில் எந்த எந்த நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்ற பெரிய எதிர்பார்ப்பே ரசிகர்கள் மத்தியில் உருவாகி இருக்கிறது. விரைவில் படக்குழு நட்சத்திர பட்டாளம் குறித்த அப்டேட்டை வெளியிடும் என எதிர்பார்த்து காத்திருப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X