twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்று வெளியாகும் ரூ 40 கோடி முதலீட்டுப் படங்கள்... கோடம்பாக்கத்தில் கொடி பறக்குமா?

    By Shankar
    |

    Recommended Video

    இந்த வாரம் வந்த படங்களில் எந்த படம் மலையேறும் எந்த படம் மண்ணை கவ்வும்,,?

    தமிழ் சினிமாவில் கடந்த ஆறு வாரமாக வெளியான எந்த படமும் பாக்ஸ் ஆபீஸ் வெற்றி கோட்டை நெருங்க முடியாமல் தமிழ் சினிமா தடுமாறிக் கொண்டிருக்கிறது.

    இன்று 1. நாகேஷ் திரையரங்கம்
    2.வீரா
    3.மேல் நாட்டு மருமகன்
    4.மனுஷனா நீ
    5.நாச்சியார் என ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகின்றன.

    Will Kollywood taste success today?

    ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிக்க இயக்குநர் பாலா இயக்கி தயாரித்து உள்ளதால் நாச்சியார் திரைப்படம் அவுட் ரேட் அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த வார வெளியீட்டில் நாச்சியார் தமிழ்நாடு முழுவதும் சுமார் 350 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்படுகிறது. சுமார் 10 கோடி வரை திரையரங்குகள், விநியோகஸ்தர்கள் தரப்பில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

    இதனால் முதல் மூன்று நாட்களில் அசலைக் கைப்பற்றும் முயற்சியில் அதிகமான தியேட்ர்களில் நாச்சியார் ரிலீஸ் செய்யப்படுவதால் மற்ற நான்கு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் உருவானது.

    Will Kollywood taste success today?

    கிருஷ்ணா, ஐஸ்வர்யா மேனன், கருணாகரன், மொட்டை ராஜேந்திரன், ஆகியோர் நடித்திருக்கும் வீரா படத்தை ராஜாராமன் இயக்கி உள்ளார்.

    விநியோக அடிப்படையில் ரீலீஸ் செய்யப்படும் வீரா இந்த வார வெளியீட்டில் தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்வதில் நாச்சியார் படத்துதுடன் கடுமையாக போட்டியிட்டது. இருப்பினும் 250 தியேட்டர்களில் இப்படம் ரீலீஸ் செய்யப்படுகிறது.

    ஆரி, அஷ்னா சவேரி, ஜோடி நடித்துள்ள நாகேஷ் திரையரங்கம் படத்தை ஐசக் இயக்கி உள்ளார்.தணிக்கையில் 12க்கும் மேற்பட்ட கட் கொடுக்க்கப்பட்டுள்ள இப்படத்திற்கு குறைவான தியேட்டர்களே கிடைத்துள்ளது.

    Will Kollywood taste success today?

    மேல் நாட்டு மருமகன், மனுஷனா நீ இரு படங்களும் மேற்கண்ட மூன்று படங்களுடன் போட்டி போட முடியாமல் தியேட்டர்கள் ஒப்பந்தம் செய்ய முடியாமல் சென்னை போன்ற பெருநகரங்களில் மால், காம்ப்ளக்ஸ் தியேட்டர்களில் குறிப்பிட்ட காட்சிகள் இப்படங்களுக்கு ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது.தமிழ்நாடு முழுவதும் பரவலாக இவ் இரு படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை.

    இன்று வெளியாகும் ஐந்து படங்களிலும் சுமார் 40 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆறு வாரங்களாக வெளியான தமிழ் படங்கள் முதலீட்டின் அடிப்படையில் எந்த படமும் லாபம் தரவில்லை.

    Will Kollywood taste success today?

    முன்னணி ஹீரோ முதல் மூன்றாம் தர நாயகன்கள் நடித்த படம் வரை தயாரிப்பாளர், விநியோகஸ்தர், திரையரங்கு உரிமையாளர்கள் என முத்தரப்புக்கும் லாபகரமாக கடந்த ஆறு வாரமாக வெளியான படங்கள் அமையவில்லை.

    இந்த வாரம் வெளியாகும் படங்களாவது வெற்றி கனியைப் பறித்து கோடம்பாபாக்கத்தில் வெற்றிக் கொடியை பறக்கவிடுமா?

    English summary
    Today there are 5 movies with the total investment of Rs 40 cr releasing. Will any one touch the winning line?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X