கேரளா ஓவர்.. அடுத்தது மும்பை.. கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் புது படத்தின் நாயகி இவரா?

சென்னை: விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து மீண்டும் கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் உருவாக உள்ள அந்த படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என தனது பட பாடல் வரியையே டைட்டிலாக்கி விட்டார் ரொமான்டிக் இயக்குநர் கெளதம் மேனன்.

போராடும் சிறுவன்.. சாப்பிடவும் முடியாமல், மூச்சு விடவும் முடியாமல்.. ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்

இந்நிலையில், நதிகளிலே நீராடும் சூரியன் படத்திற்கு பிரபல பாலிவுட் ஹீரோயினை களமிறக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

விரைவில் மாநாடு

விரைவில் மாநாடு

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி உள்ள மாநாடு திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. அதற்கு முன்னதாக ஹன்சிகாவுக்காக சிம்பு நடித்துக் கொடுத்த மஹா திரைப்படம் ஒடிடியில் வெளியாக ரெடியாகி விட்டது.

கேரள பொண்ணு

கேரள பொண்ணு

மாநாடு படத்தில் நடிகர் சிம்புவுக்கு ஜோடியாக பிரபல மலையாள இயக்குநர் பிரியதர்ஷனின் மகளான கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ளார். கேரள பொண்ணான இவர் மலையாள திரைப்படங்களிலும் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்திலும் நடித்துள்ளார். மாநாடு படத்தில் இருவருக்குமான கெமிஸ்ட்ரி எப்படி வொர்க்கவுட் ஆகியிருக்கிறது என்பதை காண ரசிகர்கள் வெயிட்டிங்.

கெளதம் மேனன் கூட்டணி

கெளதம் மேனன் கூட்டணி

விண்ணைத் தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படங்களை தொடர்ந்து கடந்த ஆண்டு லாக்டவுனில் மீண்டும் கெளதம் மேனன் உடன் இணைந்து கார்த்திக் டயல் செய்த எண் என்கிற குறும்படத்தில் நடிகை திரிஷாவுடன் இணைந்து நடித்தார் சிம்பு. விண்ணைத் தாண்டி வருவாயா 2 உருவாகும் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு புதிய சர்ப்ரைஸ் அறிவிப்பையும் இந்த கூட்டணி அறிவித்தது.

நதிகளிலே நீராடும் சூரியன்

நதிகளிலே நீராடும் சூரியன்

உடல் எடையை குறைத்து மீண்டும் செம ஸ்லிம்மான தோற்றத்தில் அதிரடி கம்பேக் கொடுத்துள்ள சிம்புவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. மீண்டும் கெளதம் மேனன் - ஏ.ஆர். ரஹ்மான் - சிம்பு கூட்டணியில் உருவாகும் படத்திற்கு நதிகளிலே நீராடும் சூரியன் என டைட்டில் வைக்கப்பட்டு இருக்கிறது. தற்போது அந்த படத்தில் நடிக்கப் போகும் ஹீரோயின் குறித்த தகவல்கள் கசிந்துள்ளன.

பாலிவுட் பால்கோவா

பாலிவுட் பால்கோவா

மாநாடு படத்தில் கேரள நடிகையுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள நடிகர் சிம்பு அடுத்ததாக பாலிவுட் ஹீரோயின் உடன் ஜோடி சேரப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் ஒடிடி தளத்தில் வெளியாகி வெற்றி நடை போட்டு வரும் மிமி படத்தில் நடித்த நடிகை க்ரித்தி சனோன் தான் சிம்பு - கெளதம் மேனன் படத்தில் நாயகியாக நடிக்கப் போகிறாராம்.

இசைப்புயல் சிபாரிசா

இசைப்புயல் சிபாரிசா

லக்‌ஷ்மன் உதேக்கர் இயக்கத்தில் வாடகைத் தாய் கருவை கொண்டு உருவாகி உள்ள மிமி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் தான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், சிம்புவின் நதிகளிலே நீராடும் சூரியன் படத்தில் க்ரித்தி சனோன் நடிக்க ரஹ்மான் சிபாரிசு செய்திருக்கலாம் என்கிற பேச்சுக்களும் அடிபட்டுள்ளன.

பிரபாஸ் ஜோடி

பிரபாஸ் ஜோடி

அதுமட்டுமின்றி நடிகர் பிரபாஸ் நடிப்பில் ராமயண கதையை மையமாக வைத்து 300 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ஆதிபுருஷ் படத்தில் க்ரித்தி சனோன் தான் சீதையாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் மட்டும் தமிழில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகம் ஆனால் வேற லெவலில் படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X