லிங்கா ரிலீஸுக்கு முன்பு ட்விட்டரை மீண்டும் அதிர வைப்பாரா ரஜினி?
சென்னை: கோச்சடையான் ரிலீஸையொட்டி ட்விட்டரில் சேர்ந்த ரஜினி அதன் பிறகு ட்வீட் செய்யவில்லை. இந்நிலையில் லிங்கா ரிலீஸையொட்டி மீண்டும் ட்வீட் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மே 5ம் தேதியை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அன்று தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்தார். கடவுளுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்ட அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை அன்று பல மடங்கு அதிகரித்தது.
மீடியாக்கள் ரஜினி ட்விட்டரில் சேர்ந்ததை பிளாஷ் நியூஸ் போட்டு செய்தி வெளியிட்டன.
மோடி, ஜெயா
லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்ற மோடி மற்றும் ஜெயலலிதாவுக்கு வாழ்த்து தெரிவித்து மே 16ம் தேதி ரஜினி 2 ட்வீட் போட்டார்.
கோச்சடையான்
தான் நடித்த கோச்சடையான் படக்குழுவுக்கும், மகள் சௌந்தர்யாவுக்கும் வாழ்த்து தெரிவித்து மே மாதம் 23ம் தேதி 2 ட்வீட் போட்டார்.

காணவில்லை
மே 22ம் தேதிக்கு பிறகு ரஜினிகாந்த் ட்விட்டர் பக்கமே வரவில்லை.

லிங்கா
கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் லிங்கா படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் நவம்பர் 9ம் தேதி நடைபெறுகிறது.

மீண்டும்
லிங்கா ரிலீஸையொட்டி ரஜினி மீண்டும் ஏதாவது ட்வீட் செய்வாரா என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஃபேன்ஸ் ஆர் வெயிட்டிங்...


Click it and Unblock the Notifications











