'கைதி' இந்தி ரீமேக்கா? தலைவர் 169 படமா? எதை இயக்கப் போகிறார் லோகேஷ் கனகராஜ்?

By

சென்னை: கைதி படத்தின் இந்தி ரீமேக் அல்லது ரஜினி நடிக்கும் 'தலைவர் 169' , இதில் எதை லோகேஷ் கனகராஜ் இயக்கப் போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது.

மாநகரம் படத்தை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். இந்தப் படம் கவனிக்கப்பட்டதை அடுத்து கார்த்தி நடித்த கைதி படத்தை இயக்கினார். இந்தப் படம் ஹிட்டானது.

இதையடுத்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார். இதில் விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

சென்னையில் பாடல் வெளியீடு

சென்னையில் பாடல் வெளியீடு

வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார். சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் முதல் பாடலான குட்டி ஸ்டோரி வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து மார்ச் 15 ஆம் தேதி சென்னையில் இதன் பாடல் வெளியீட்டு விழா நடக்கிறது.

அஜய் தேவ்கன்

அஜய் தேவ்கன்

இந்நிலையில் கைதி படம் இந்தியில் ரீமேக் ஆகிறது. ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் இணைந்து இதை தயாரிக்கிறது. ஹீரோவாக ஹிர்த்திக் ரோஷன் நடிக்க இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் பாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ அஜய் தேவ்கன் நடிக்கிறார். இவர் ஏற்கனவே சூர்யாவின் சிங்கம் படத்தின் இந்தி ரீமேக்கில் நடித்தவர்.

தலைவர் 169

தலைவர் 169

கைதி இந்தி ரீமேக்கையும் லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்று முதலில் கூறப்பட்டது. இந்நிலையில், மாஸ்டருக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 169 படத்தை அவர் இயக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் இப்போது கைதி இந்தி ரீமேக்கை இயக்குவாரா? அல்லது ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

முன்னணி இந்தி இயக்குனர்

முன்னணி இந்தி இயக்குனர்

'இந்தி கைதியை லோகேஷ் கனகராஜ் இயக்க வாய்ப்பில்லை. டாப் ஹீரோவான அஜய்தேவ்கனை, இளம் இயக்குனர் இயக்க அவர்கள் சம்மதிப்பார்களா தெரியவில்லை. இதனால் பெரும்பாலும் முன்னணி இந்தி இயக்குனர் ஒருவர் இந்தப் படத்தை இயக்கலாம்' என்று சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X