விரைவில் முடிகிறது நாகினி 4 தொடர்.. இவர்தான் அடுத்த நாகினியாம்.. 'கெத்து'ல டான்ஸ் போட்டவராச்சே!

By

சென்னை: நாகினி தொடரின் அடுத்த சீசனில் பிரபல நடிகை நாகினியாக நடிக்க இருக்கிறார்.

Recommended Video

Nagini 4 | நாகினி | Rashmi Desai | Bigg boss 13

இந்தியில் சூப்பர் ஹிட்டான தொடர் நாகினி. இதன் முதல் சீசனில் மௌனி ராய், அதா கான், அர்ஜுன் பிஜ்லானி, சுதா சந்திரன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர்.

தமிழ் தெலுங்கு மொழிகளிலும் இந்த தொடர் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. இதன் முதல் பாகம், சன் டிவியில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.

அதிக வரவேற்பு

அதிக வரவேற்பு

இப்போது கலர்ஸ் தமிழில் வெளியாகி வருகிறது. இந்த தொடரின் அடுத்த சீசனிலும் மௌனி ராய், அதா கான், சுதா சந்திரன் முக்கிய வேடங்களில் நடித்தனர். இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைந்துள்ளது. இதன் மூன்றாவது சீசனில் நடிகர்கள் மாற்றப்பட்டனர். இப்போது நான்காவது சீசன் நடந்து வருகிறது.

மஹேக் சாஹல்

மஹேக் சாஹல்

இதில் நியா சர்மா, ஜாஸ்மின் பாசின், விஜயேந்திர குமாரியா உட்பட பலர் நடித்து வருகின்றனர். லாக்டவுன் காரணமாக இந்த தொடர் விரைவில் முடிய இருக்கிறது. இதன் அடுத்த சீசன் புதிய நடிகர், நடிகைகளுடன் தொடங்க இருக்கிறது. நாகினி தொடரின் 5 சீசனில், நாகினியாக பிரபல இந்தி நடிகை மஹேக் சாஹல் (Mahekk Chahal) நடிக்க இருக்கிறார்.

ரீமேக்கில் ஹீரோயின்

ரீமேக்கில் ஹீரோயின்

இந்தி நடிகையான இந்த மஹேக் சாஹல், தமிழில் உதயநிதி ஸ்டாலின், எமி ஜாக்சன் நடித்த கெத்து படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். தமிழில் விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்தியில் பல படங்களில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மேலும் பிரபலமடைந்தார்.

செலவுகள் குறைப்பு

செலவுகள் குறைப்பு

சில சின்னத்திரைத் தொடர்களிலும் நடித்துள்ளார். லாக்டவுன் காரணமாக 30 சதவிகித செலவை குறைக்க தயாரிப்பாளர் ஏக்தா கபூர் முடிவு செய்துள்ளதால், அதிக சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகளுக்குப் பதிலாக வேறு நடிகர், நடிகைகளை நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து மஹேக் சாஹலை நடிக்க வைக்க உள்ளனர். ஆனால், நாகினி குழு இதை உறுதிப்படுத்தவில்லை.

பாம்பு உருவம்

பாம்பு உருவம்

பாம்பு கதையை கொண்ட இந்த தொடர், பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் பிடித்துப் போனதால், இந்த தொடர் வரவேற்பை பெற்றுள்ளது. அவ்வப்போது மனித உருவமும், பாம்பு உருவமுமாக மாறி மாறி இருக்கும் இச்சாதாரி பாம்புகள், விலைமதிப்பற்ற நாகமணி, அதை மனிதர்கள் எடுத்து வைத்துக்கொண்டு, இச்சாதாரி பாம்புகளை அலைய விடுவது என்பது போன்ற கதை அமைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X