டங்கா மாரி.. ஆளுமா டோலுமா.. வரிசையில் மெர்சல் கிளப்புமா மால்டோ கித்தாப்புலே?

சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தில் இடம்பெற்றுள்ள ’மால்டோ கித்தாப்புலே’ பாடலை டங்கா மாரி ஊதாரி, ஆலுமா டோலுமா, பாடல்களை எழுதிய பாடலாசிரியர் ரோகேஷ் தான் எழுதியுள்ளாராம்.

சென்னை: பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், கல்யாணி பிரியதர்ஷன், அபய் தியோல், அர்ஜுன், இவானா நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படம் அடுத்த மாதம் டிசம்பர் 20ம் தேதி வெளியாகிறது.

ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான 'மால்டோ கித்தாப்புலே' பாடல் வரும் நவம்பர் 7ம் தேதி வெளியாகும் என இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா அறிவித்துள்ளார்.

டங்கா மாரி ஊதாரி, ஆளுமா டோலுமா பாடல்களை எழுதிய கானா பாடலாசிரியர் ரோகேஷ் தான் இந்த 'மால்டோ கித்தாப்புலே' பாடலை எழுதியுள்ளார்.

புள்ளிங்கோவுக்கு போட்டி

புள்ளிங்கோவுக்கு போட்டி

டங்கா மாரி, ஆலுமா டோலுமா, சிம்டாங்காரன், புள்ளிங்கோ என தமிழ் சினிமாவில் புதிது புதிதாக வார்த்தைகள் பாடல்களாக மாறி வருகிறது. இப்படி புதியதாக வரும் வார்த்தைகள் பாடல்களை ஹிட்டாக்குவது மட்டுமின்றி தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும், ஆர்வத்தையும் உண்டு பண்ணுகிறது. சமீபத்தில் வெளியான பிகில் படத்தின் வெறித்தனம் பாடலில் வந்த புள்ளிங்கோ இருக்காங்க வேறு என்ன வேணும் என்ற வரிகளில் வந்த புள்ளிங்கோ என்ற வார்த்தை, சமூக வலைதளங்களில் வேற லெவல் விவாதத்தை முன் வைத்தன.

தற்போது சிவகார்த்திகேயனின் ஹீரோ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் லிரிக்ஸ் ஆன மால்டோ கித்தாப்புல்லே பாடல் வரிகள் புள்ளிங்கோவுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கெத்து காட்டும் ரோக்கேஷ்

கெத்து காட்டும் ரோக்கேஷ்

சென்னை, வியாசர்பாடியை சேர்ந்த கானா பாடலாசிரியர் ரோக்கேஷ், தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். அநேகன் படத்தில் இடம்பெற்ற டங்கா மாரி ஊதாரி பாடலின் மூலமே உலகளவில் ஃபேமஸ் ஆனார்.

அதன் பின்னர், ஷார்ப்பு கேங்கு, 'பகுலு உடையும் டகுலு மாரி, டண்டணக்கா, பிட்டு படம் டி, ஆளுமா டோலுமா, ஜித்து ஜில்லாடி, கோவிந்தமாலே போன்ற பல ஹிட் பாடல்களை தொடர்ந்து எழுதி வருகிறார். தற்போது, ஹீரோ படத்தில் இடம்பெற்றுள்ள மால்டோ கித்தாப்புல்லே பாடலையும் இவர்தான் எழுதியுள்ளாராம்.

புள்ளிங்களா ரெடியா

புள்ளிங்களா ரெடியா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ஹீரோ படத்தில் இடம்பெற்றுள்ள ‘மால்டோ கித்தாப்புல்லே' பாடல் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ளது. வரும் நவம்பர் 7ம் தேதி இந்த பாடல் வெளியாகி தமிழ் ரசிகர்களை ஆட்டம் போட வைக்கவுள்ளது. இதன் அறிவிப்பை வெளியிட்ட யுவன், 'Get Ready Pullingos' என புள்ளிங்களை தயாராக சொல்லி உள்ளார்.

கன்ஃபார்ம் ஹிட்

கன்ஃபார்ம் ஹிட்

இதுபோன்ற வித்தியாசமான வார்த்தைகளில் ஆரம்பிக்கும் பாடல்கள் நிச்சயம் வெற்றி பெறும் என்பது தமிழ் சினிமாவின் வரலாறாகவே மாறியுள்ளது. தவுலத்தா, கெத்தா இருக்கும் பசங்களை குறிப்பிடும் சொல்லாக கருதப்படும் மால்டோ கித்தப்புலே என்ற பாடலுக்கு நடிகர் சிவகார்த்திகேயன், தர லோக்கல் குத்தாட்டம் போட்டு, ரசிகர்கள் ஆட வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்னும் ஜஸ்ட் 2 டேஸ் தான் சிவகார்த்திகேயன் புள்ளிங்களா ரெடியாயிடுங்க!

More from Filmibeat

Read more about: hero ஹீரோ
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X