twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பிறந்தாச்சு புத்தாண்டு.. மாற்றத்தை ஏற்படுத்துமா விஜய்யின் 'மாஸ்டர்?' காத்திருக்கும் திரையுலகம்!

    By
    |

    சென்னை: கொரோனா காரணமாக தியேட்டருக்கு வராத ரசிகர்களை, 'மாஸ்டர்' படம் இழுத்து வரும் என்று திரையுலகினர் எதிர்பார்த்திருக்கின்றனர்.

    கடந்த வருடத்தின் மிகப்பெரிய கொடுமை, கொரோனா. இந்த உயிர்கொல்லி வைரஸால் மொத்த உலகமும் அச்சத்தில் உறைந்தது.

    இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டுள்ள நிலையில், அடுத்த வகை கொரோனா உருவாகி இருப்பதாக தகவல் வந்துகொண்டிருக்கிறது.

    தீவிர நடவடிக்கை

    தீவிர நடவடிக்கை

    இந்த கொரோனாவால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். ஏராளமானவர்கள் உயிரிழந்துள்ளனர். இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும் கொரோனா முற்றிலும் சென்றுவிடவில்லை. தொடர்ந்து அது பயமுறுத்துக்கொண்டிருக்கிறது. இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட துறைகளில் சினிமாவும் ஒன்று.

    மூக்குத்தி அம்மன்

    மூக்குத்தி அம்மன்

    கொரோனாவால் சினிமாதுறை மொத்தமாக முடங்கி இருக்கிறது. பல கோடி ரூபாய் முதலீடு செய்து எடுக்கப்பட்ட படங்கள் ரிலீஸ் செய்யப்படாமல் இருக்கின்றன. இதனால் சில தயாரிப்பாளர்கள் ஓடிடியில் படங்களை வெளியிட்டனர். இதில் சூரரைப் போற்று, மூக்குத்தி அம்மன், க/பெ ரணசிங்கம் ஆகிய படங்கள் வரவேற்பைப் பெற்றன.

    அரசு அனுமதி

    அரசு அனுமதி

    தியேட்டர் அதிபர்கள் மற்றும் திரையுலகினரின் கோரிக்கையை ஏற்று அரசு, 50 சதவிகித இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க சில மாதங்களுக்கு முன் அனுமதி அளித்தது. இருந்தும் ரசிகர்கள் தியேட்டருக்கு வரவில்லை. குறைவான ரசிகர்களே வந்ததால், பல தியேட்டர்களில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

    விஜய்யின் மாஸ்டர்

    விஜய்யின் மாஸ்டர்

    இதனால் தியேட்டர் அதிபர்களும் தயாரிப்பாளர்களும் கவலை அடைந்துள்ளனர். அவர்களின் இப்போதையை ஒரே நம்பிக்கையாக இருப்பது, விஜய்யின் மாஸ்டர் படம் மட்டுமே. இந்தப் படத்தால் ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படையெடுப்பார்கள் என்று நம்புகிறார்கள். இந்த படத்துக்குப் பிறகு ரசிகர்கள் தியேட்டருக்கு குடும்பத்துடன் வருவது அதிகரிக்கும் என்று நம்புகிறார்கள்.

    தொடர்ந்து வருவார்கள்

    தொடர்ந்து வருவார்கள்

    அதை எதிர்பார்த்தே காத்திருக்கின்றனர். அவர்களின் எதிர்பார்ப்பை மாஸ்டர் காப்பாற்றுமா இல்லையா என்பது பொங்கலுக்குப் பிறகே தெரியும். இதுபற்றி தயாரிப்பாளர் தனஞ்செயனிடம் கேட்டபோது, மாஸ்டர் ரிலீசுக்குதான் மொத்த திரையுலகமே காத்துக் கொண்டிருக்கிறது. இதற்கு ரசிகர்கள் அதிகளவு வந்தால், தொடர்ந்து வருவார்கள். இல்லை என்றால் சினிமா துறை இன்னும் சில காலம் காத்திருக்க வேண்டியதுதான் என்கிறார்.

    கல்லூரி பேராசிரியர்

    கல்லூரி பேராசிரியர்

    மாஸ்டர் படத்தில் விஜய், மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்துள்ளனர். விஜய் சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கிறார். இதில் விஜய், கல்லூரி பேராசிரியர் கேரக்டரில் நடித்துள்ளார்.

    பொங்கல் ரிலீஸ்

    பொங்கல் ரிலீஸ்

    இந்தப் படம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. கொரோனா பரவல் காரணமாக, லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டதால் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் பொங்கலுக்கு வெளியாகிறது. அதாவது வரும் 13 ஆம் தேதி வெளியாகிறது.

    English summary
    Will Vijay's 'Master' pull the audience back to the theatres?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X