twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மத்திய அரசின் அதிரடி அறிக்கை.. திட்டமிட்டபடி மாஸ்டர் ரிலீஸ் ஆகுமா? 50 சதவீத இருக்கை தொடருமா?

    |

    சென்னை: நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

    நடிகர் விஜய்யின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு வரும் பொங்கல் முதல் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்துள்ளது.

    ஆனால், இது மத்திய அரசின் கொரோனா கொள்கைக்கு எதிரானது என அதிரடி அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது.

    95 நாளா கோமாவுல இருந்தியா.. அதே பத்து வருஷ பழைய கதை.. கேப்டனாவே ஆகல.. சோமை கிழிக்கும் ஃபேன்ஸ்!95 நாளா கோமாவுல இருந்தியா.. அதே பத்து வருஷ பழைய கதை.. கேப்டனாவே ஆகல.. சோமை கிழிக்கும் ஃபேன்ஸ்!

    வந்தது சிக்கல்

    வந்தது சிக்கல்

    விஜய் படம் ரிலீஸ் என்றாலே சிக்கல் இல்லாமல் இதுவரை இருந்தது இல்லை. மாஸ்டர் திரைப்படத்திற்கு கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் காலனாக மாறி ஓராண்டு காலம் படத்தின் ரிலீஸையே தள்ளி வைத்தது. இந்நிலையில், 100 சதவீதம் தியேட்டர் இருக்கைகளுடன் படம் வெளியாகப் போகிறது என எதிர்பார்க்கப்பட்டு கொண்டாட்டங்கள் ஆரம்பமாகி உள்ளது.

    மத்திய அரசு எச்சரிக்கை

    மத்திய அரசு எச்சரிக்கை

    மத்திய அரசின் கொரோனா கட்டுப்பாடு விதிகளை பின்பற்றாமல் தமிழக அரசு மாஸ்டர் படத்தை முன்னிட்டு தியேட்டர்களுக்கு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி கொடுத்தது சட்டப்படி குற்றம் என அதிரடியாக மத்திய அரசு சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனால், 100 சதவீத இருக்கைக்கு அளிக்கப்பட்ட அனுமதி திரும்பப் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    பொங்கலுக்கு வெளியாகுமா

    பொங்கலுக்கு வெளியாகுமா

    100 சதவீத இருக்கைகளுடன் தியேட்டரில் வெளியிடவே நடிகர் விஜய் மற்றும் மாஸ்டர் படக்குழு பொங்கல் ரிலீசுக்கு களமிறங்கிய நிலையில், இந்த அதிரடி அறிவிப்பால், திட்டமிட்டபடி மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகுமா? என்கிற சந்தேகம் கிளம்பியுள்ளது. 50 சதவீத இருக்கைகளுடன் மாஸ்டர் படத்தை வெளியிட படக்குழு சம்மதம் தெரிவிக்குமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

    தமிழக அரசின் முடிவு என்ன?

    தமிழக அரசின் முடிவு என்ன?

    கொரோனா அச்சம் காரணமாக தியேட்டர்களில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்கிற எதிர்ப்பு பல தரப்பிலும் கிளம்பி வரும் நிலையில், தற்போது மத்திய அரசின் எச்சரிக்கையும் வந்துள்ளது. இந்நிலையில், தனது நிலைப்பாட்டை தமிழக அரசு மாற்றிக் கொண்டு, 100 சதவீத தியேட்டர்களின் இருக்கை அறிவிப்பை திரும்பப் பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

    ரசிகர்கள் கேள்வி

    ரசிகர்கள் கேள்வி

    தொழில் துறை, பணியிடங்கள், பொது இடங்கள், காய்கறி சந்தை, மீன் மார்க்கெட், டாஸ்மாக், ரேஷன் கடைகள் என அனைத்திலும் கூட்டம் அலைமோதும் நிலையில், அங்கெல்லாம் கொரோனா பரவாதா? தியேட்டர்களை மட்டும் தடை செய்வது எந்த விதத்தில் நியாயம் என்கிற கேள்வியை ரசிகர்கள் முன் வைத்து வருகின்றனர்.

    அமேசான் பிரைமில்

    அமேசான் பிரைமில்

    எப்படியோ அடுத்த மாதம் அமேசான் பிரைமில் மாஸ்டர் திரைப்படம் வெளியாகி விடும். வீட்டில் இருந்தபடியே பாதுகாப்பாக மாஸ்டர் படத்தை பார்த்துக் கொள்வோம், தியேட்டருக்கு சென்று படத்தை பார்க்கும் எண்ணம் இப்போதைக்கு இல்லை என்றும், முதல் ஒரு வாரம் மட்டும் தான் ரசிகர்கள் கூட்டம் இருக்கும், அதன் பிறகு தியேட்டர்கள் காலியாகத்தான் இருக்கும் அப்போது போய் பார்த்துக் கொள்ளலாம் என பலவித கருத்துக்கள் எழுந்து வருகின்றன.

    English summary
    Another big struggle for Vijay’s Master release. Central Government issues order against for 100 percentage theater occupancy.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X