பாபநாசம் 2 ல் கமலுடன் நடிக்கிறீர்களா... மீனா என்ன தான் சொல்றார்?
சென்னை : மலையாள பிளாக்பஸ்டர் படமான த்ரிஷ்யம் படத்தில் மோகன்லால் நடித்திருந்தார். பெரும்பாலான ரசிகர்களை கவர்ந்த த்ரில்லர் படமான இது தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது.
தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்ட இந்த படத்தில் கமல், கவுதமி, நிவேதா தாமஸ், எஸ்தர் அனில் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படத்தையும் மலையாளத்தில் த்ரிஷ்யத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் தான் இயக்கினார்.

த்ரிஷ்யம் 2 க்கு முன் பாபநாசம் 2
த்ரிஷ்யம் 2 படத்தின் ரிலீசுக்கு முன்பே பாபநாசம் 2 பேச்சை துவக்கி விட்டார் ஜீத்து ஜோசப். ஆனால் த்ரிஷ்யம் 2 படத்தின் வெற்றியை பொருத்து தான் கமலுடன் பேச வேண்டும் என்று முன்பே கூறி இருந்தார். ஓடிடி.,யில் தான் த்ரிஷ்யம் 2 வெளியிடப்பட்டது.

கவுதமிக்கு நோ சொன்ன கமல்
டைரக்டர் எதிர்பார்த்ததை போலவே த்ரிஷ்யம் 2 நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் பாபநாசம் 2 படத்தை எடுக்க முடிவு செய்து, கமலிடம் பேசினார் ஜீத்து ஜோசப். படத்திற்கு ஓகே சொன்ன கமல், கவுதமி ரோலில் வேறு நடிகை அல்லது மீனாவையே நடிக்க வைக்க வேண்டும் என்றார்.

ரசிகர்களுக்கு சலிப்பு வரும்
ஏற்கனவே மலையாளம், கன்னடம், தெலுங்கில் த்ரிஷ்யம் 2 ரீமேக்கில் மீனா தான் நடித்தார். தமிழிலும் அவரையே நடிக்க வைத்தால் ரசிகர்களுக்கு சலிப்பு தட்டி விடும். இது படத்தின் வசூலை பாதிக்கும் என தயாரிப்பாளர் ஸ்ரீபிரியா நினைக்கிறார்.

கமலுக்கு ஜோடியாக நதியாவா
இதற்கிடையில் பாபநாசம் 2 படத்தில் மீனாவிற்கு பதில் நதியாவை நடிக்க வைக்கலாம் என்ற பேச்சும் அடிப்பட்டுள்ளது. 80 களில் முன்னணி ஹீரோயினாக இருந்த நதியா இதுவரை கமலுடன் ஒரு படத்தில் கூட இணைந்து நடித்தது இல்லை. இதனால் இவர்களின் காம்போ ரசிகர்களுக்கு புதிதாக இருக்கும் என படக்குழு நினைத்தது.


Click it and Unblock the Notifications











