சமந்தா, திரிஷாவுக்கு கை கொடுத்த சென்டிமென்ட்.. மேகா ஆகாஷையும் தூக்கி நிறுத்துமா?
Recommended Video

சென்னை: சினிமாவில் வெற்றி பெற என்னதான் கடும் முயற்சியும், உழைப்பும் முக்கியம் என்றாலும் அவ்வப்போது எதிர்பாராமலே சில செண்டிமெண்ட் உருவாவதுண்டு.
முதல் படம் ரிலீய்ஸ் ஆகவில்லை என்றால் அவர்களது சினிமா வாழ்க்கை அடுத்த கட்டத்திற்கு போகுமா என்பது கேள்விக்குறியே. ஆனால், முதல் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே மற்றோரு படம் ரிலீஸ் ஆன நடிகைகள், தமிழ் சினிமாவில் கனவுக்கன்னியாக வலம் வந்துள்ளனர்.
இந்த செண்டிமெண்ட் உருவாவதற்கு காரணமாக இருண்டஹ்வர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்கு முன் தற்போது இந்த் பட்டியலில் புதிதாக இணைந்தவர் யார் என்பதை பார்க்கலாம்.

ஒத்தப் பாட்டிலேயே ஓஹோ
மறுவார்த்தை பேசாதே என்ற ஒற்றை பாடலின் மூலம் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர் மேகா ஆகாஷ். கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷுடன் நடித்த இந்த படம் பெரும் எதிர் பார்ப்பை ரசிகர்கள் இடையே ஏற்படுத்திய நிலையில், பல்வேறு காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தள்ளி போயுள்ளது.

ஒரு பக்கா கதை
இது அவரது 2-வது படம். இவரது முதல் படம் 'ஒரு பக்க கதை'. இந்த 2 படங்களுமே ரிலீஸ் ஆகாத நிலையில், பேட்ட, வந்தா ராஜாவாதான் வருவேன் ஆகிய
அடுத்த 2 படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. இதனையடுத்து அதர்வாவுடன் நடித்துள்ள பூமராங் படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது.

கையில் 3
ஆண்டு தொடக்கத்திலேயே இவருக்கு 3 படங்களின் ரிலீஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் முதல் 2 படங்களும் ரிலீஸ் ஆனால் இந்த ஆண்டில் 5 படங்களில் நடித்த ஹீரோயின் என்ற பெருமையை பெறுவார்.

சமந்தா, திரிஷா வழியில்
இதற்கு முன்னதாக, சமந்தா, திரிஷா உள்ளிட்டோருக்கு இதே போன்று நடந்துள்ளது. சமந்தா முதலில் நடிக்க ஒப்பந்தமானது மாஸ்கோவின் காவிரி என்றாலும், பாணா காத்தாடிதான் முதலில் ரிலீஸ் ஆனது. திரிஷாவுக்கும் இப்படித்தான். லேசா லேசா தான் முதலில் நடித்த படம் என்றாலும், மவுனம் பேசியதே திரைப்படம் அதற்கு முன்னரே ரிலீஸ் ஆகியது. திரிஷா, சமந்தா போன்று, மெகா ஆகாஷும் தமிழக ரசிகர்களின் கனவுக்கன்னி ஆவாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா ரசிப்பவர்களாச்சே நம்மவர்கள்.. பொறுத்திருப்போம்.


Click it and Unblock the Notifications











