ரஜினியின் கோச்சடையானுடன் மோதும் விஷாலின் நான் சிகப்பு மனிதன்?
சென்னை: ரஜினிகாந்தின் கோச்சடையான் ரிலீஸாகும் அதே நாளில் விஷாலின் நான் சிகப்பு மனிதன் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள கோச்சடையான் படம் பொங்கலுக்கு ரிலீஸாக வேண்டியது. ஆனால் பொங்கலுக்கு விஜய்யின் ஜில்லா மற்றும் அஜீத்தின் வீரம் ஆகிய படங்கள் ரிலீஸானதால் கோச்சடையானை சோலோவாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர்.
இதையடுத்து ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டது.

ஏப்ரல் 11ம் தேதி
கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 28ம் தேதி நடக்கிறது. இதையடுத்து படத்தை 6 ஆயிரம் தியேட்டர்களில் வரும் ஏப்ரல் மாதம் 11ம் தேதி பிரமாண்டமாக ரிலீஸ் செய்கிறார்கள்.

நான் சிகப்பு மனிதன்
விஷால் தயாரித்து நடிக்கும் நான் சிகப்பு மனிதன் படத்தை கோச்சடையான் ரிலீஸாகும் அதே ஏப்ரபல் 11ம் தேதி வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம். இந்த தகவலை படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான யுடிவி மோஷன் பிக்சர்ஸின் தனஞ்ஜெயன் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

மார்ச் மாதம்
தமிழ் சினிமா மாறிவிட்டது. ஏராளமான படங்கள் ரிலீஸாகின்றன. படம் ரிலீஸாக 2 வாரம் இருக்கும் வரையில் எந்த திட்டம் பற்றியும் உறுதியாகக் கூற முடியாது. படத்தை ஏப்ரல் 11ம் தேதி ரிலீஸ் செய்வது பற்றி வரும் மார்ச் மாத இறுதியில் மீண்டும் பரிசீலிப்போம் என்றார் கோவிந்த்.

தேதி மாறுமா?
ரஜினியின் படத்திற்கு ஏராளமான தியேட்டர்களை புக் செய்து வைத்திருப்பதால் விஷால் படத்திற்கு தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படலாம். இதனால் விஷால் தனது படத்தின் ரிலீஸ் தேதியை தள்ளிப்போடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பாண்டியநாடு
பாண்டியநாடு படம் முதலில் குறிப்பிட்ட தியேட்டர்களில் மட்டுமே ரிலீஸானது. படத்திற்கு கிடைத்த வரவேற்பை பார்த்து தியேட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஒரு வேளை இதே யுக்தியை நான் சிகப்பு மனிதனுக்கும் கையாள்வாரோ விஷால்?


Click it and Unblock the Notifications











