நடிகர் சங்க தேர்தலை நிறுத்த மாவட்ட பதிவாளர் உத்தரவு: ஆளுநரை சந்தித்த விஷால்

By Siva

Recommended Video

Nadigar Sangam: பாண்டவர் அணி பொய் மட்டுமே பேசுகிறது - சுவாமி சங்கரதாஸ் அணி- வீடியோ

சென்னை: நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னையில் உள்ள எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி மறுத்து நேற்று உத்தரவிட்டது.

Will Nadigar Sangam election happen on june 23rd?

தேர்தல் நடக்கும் தேதியில் அந்த கல்லூரியில் எஸ்.வி. சேகரின் நாடகம் நடக்க மட்டும் அனுமதி அளிப்பதா என்று நாசர், விஷால் அடங்கிய பாண்டவர் அணி கேள்வி எழுப்பியுள்ளது.

இதற்கிடையே நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்யக் கோரி பாரதி பிரியன் உள்பட 61 பேர் சங்கங்களின் பதிவாளரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து விதிகளை மீறி உறுப்பினர்களை சங்கத்தில் இருந்து நீக்கியது ஏன் என்று விளக்கம் கேட்டு நடிகர் சங்கத்திற்கு பதிவாளர் நோட்டீஸ் அனுப்பினார்.

இந்நிலையில் நடிகர் சங்க தேர்தலை நிறுத்துமாறு மாவட்ட பதிவாளர் இன்று உத்தரவிட்டுள்ளார்.தேர்தலில் குளறுபடிகள் நடந்துள்ளதாக பதிவாளர் தெரிவித்துள்ளார். இதனால் நடிகர் சங்க தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது ஒரு புறம் இருக்க நடிகர் சங்க தேர்தல் விவகாரம் தொடர்பாக விஷால் மற்றும் பாண்டவர் அணியினர் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து பேசியுள்ளனர்.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை அடுத்து விஷால் ஆளுநரை சந்தித்து பேசியுள்ளார். நடிகர் சங்க தேர்தலுக்கும், ஆளுநருக்கும் என்ன தொடர்பு விஷால் என்று விமர்சனம் எழுந்துள்ளது.

பாண்டவர் அணியினர் பொய் மட்டுமே பேசுவதாக சுவாமி சங்கரதாஸ் அணியை சேர்ந்த நடிகர் உதயா தெரிவித்தார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த நாசரோ, எதிரணி சுவாமி சங்கரதாஸ் அணி இல்லை அது ராதாரவி அணி என்றார்.

ராதாரவி அதிமுகவில் சேர்ந்தது கூட நடிகர் சங்க தேர்தலில் பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியை வெற்றி பெற வைக்கத்தான் என்று அதீத கற்பனையுடன் பேசத் துவங்கிவிட்டார்கள். நடிகர் சங்க தேர்தல் நடக்கும் நாள் அன்று தான் விஷால் தனது டிராமாவை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்தோம் ஆனால் அவர் ஏற்கனவே துவங்கிவிட்டாரே. நிஜ வாழ்க்கையில் நீங்கள் நல்ல நடிகர் என்று வரலட்சுமி சரத்குமார் விஷாலை விளாசியதில் தப்பே இல்லை என்று சமூக வலைதளங்களில் பேசிக் கொள்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X