»   »  நமீதாவின் வாய் முகூர்த்தம் பலிக்குமா?

நமீதாவின் வாய் முகூர்த்தம் பலிக்குமா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப் போவது யார் என்று நினைக்கிறீர்கள்?

பிக் பாஸ் வீட்டில் இருந்து வார இறுதிநாட்களில் ஒருவர் வெளியேற்றப்பட்டு வருகிறார். கடந்த வாரம் நடிகை ஆர்த்தி வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் நமீதா அல்லது கணேஷ் வெங்கட்ராமன் வெளியேற்றப்பட உள்ளார்.

இவர்களில் யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து கிளம்புகிறார்கள் என்பது இன்று இரவு தெரிந்துவிடும்.

கமல்

கமல்

ஒரு போட்டியாளரை வெளியேற்ற கமல் இன்று பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப் போவதாகக் கூறி நமீதா ஏற்கனவே தனது பொருட்களை பேக் செய்தார்.

நமீதா

நமீதா

தொடர்ந்து தந்திரமாக நடந்து கொண்டால் பிக் பாஸ் வீட்டில் நீடிக்க முடியாது என்று நமீதா பற்றி கமல் ஹாஸன் கடந்த வாரமே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கணேஷ் வெங்கட்ராம்

கணேஷ் வெங்கட்ராம்

பிக் பாஸ் வீட்டிற்கு வந்ததில் இருந்து கணேஷ் வெங்கட்ராம் எந்த வம்பு தும்புக்கும் போகாமல் சமத்தாக இருந்து வருகிறார். அவர் வெளியேற்றப்படுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிக் பாஸ்

பிக் பாஸ்

பிக் பாஸ் வீட்டில் இருந்து இன்று இரவு வெளியேறப் போவது நமீதா தான் என்று ஆளாளுக்கு சமூக வலைதளங்களில் தெரிவித்து வருகிறார்கள். நமீதாவின் நடவடிக்கைகள் பலருக்கும் பிடிக்கவில்லை.

ஜூலி

ஜூலி

நம்மை போன்றவர்களை எல்லாம் பார்வையாளர்களுக்கு பிடிக்காது, ஜூலி மற்றும் ஓவியாவை தான் அனைவருக்கும் பிடித்திருக்கிறது. அவர்களில் யாராவது ஒருவர் தான் ஜெயிப்பார் என்று நமீதா முன்பு ரைசாவிடம் கூறியிருந்தார்.

English summary
Kamal Haasan is all set to send one of the contestants from the Big Boss house today. Will Namitha get kicked out?
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil