For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிக்பாஸ் வீட்டிற்குள் ரிஎன்ட்ரி கொடுக்கும் நமீதா மாரிமுத்து...வெளியான பரபரப்பு தகவல்

  |

  சென்னை : அக்டோபர் 3 ம் தேதி துவங்கி நடந்து வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி வெற்றிகரமாக இரண்டாவது வாரத்தை எட்டி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் ஆரம்பம் முதலே ரசிகர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்து வருபவர் நமீதா மாரிமுத்து.

  அரண்மனை 3 அருமையாக இருப்பதாக பாராட்டினாரு... உதயநிதி குறித்து சுந்தர் சி மகிழ்ச்சி! அரண்மனை 3 அருமையாக இருப்பதாக பாராட்டினாரு... உதயநிதி குறித்து சுந்தர் சி மகிழ்ச்சி!

  பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல் முறையாக திருநங்கை ஒருவர் போட்டியாளராக பங்கேற்றுள்ளார். பிக்பாஸ் வீட்டிற்குள் முதல் டாஸ்க்காக போட்டியாளர்கள் தங்களின் வாழ்க்கையில் கடந்து வந்த பாதையை, கதை சொல்ல போறோம் என்ற தலைப்பில் சொல்ல வேண்டும் என கொடுக்கப்பட்டது.

  ஓப்பனாக பேசிய நமீதா

  ஓப்பனாக பேசிய நமீதா

  இந்த டாஸ்க்கில் திருநங்கை சமூகத்தின் குரலால் ஒளித்ததது நமீதாவின் குரல். தன்னை புரிந்து கொள்ளாமல் தனது பெற்றொர்கள் அடித்து உதைத்தது, மனநல மருத்துவமனையில் சேர்த்தது, சாப்பாட்டில் விஷம் வைத்தது, தொடர்ந்து தனது வாழ்க்கையில் சந்தித்த போராட்டங்கள், கஷ்டங்கள் போன்றவற்றை ஓப்பனாக பேசினார். இது அனைவரின் மனதையும் கவர்ந்தது.

  ஹார்ட்டை அள்ளிய நமீதா

  ஹார்ட்டை அள்ளிய நமீதா

  நமீதாவின் கதை, திருநங்கைகள் மீது இரக்கம் காட்ட வேண்டாம். அவர்களையும் சமமாக நடத்துங்கள், எங்களுக்கு படிப்பை மட்டும் கொடுங்கள் நாங்கள் முன்னேறி காட்டுவோம் என கூறியது அனைவரின் மனதையும் உருக செய்ததுடன் கண்ணீர் விட வைத்தது. போட்டியாளர்களில் அதிகபட்சமாக அனைவரிடமும் ஹார்ட் எமோஜிக்களை பெற்றார்.

  தாமரையுடன் மோதல்

  தாமரையுடன் மோதல்

  பிறகு தாமரை செல்வி பேசியதை தவறாக புரிந்து கொண்ட நமீதா, அவருடன் சண்டை போட்டார். இமான் அண்ணாச்சி, இருவருக்கும் சமாதானம் செய்து வைக்க முயற்சித்த போதும் நமீதா அதை வேண்டாம் என மறுத்தார். பிறகு தானாக சென்று மன்னித்து விட்டதாக தாமரையிடம் கூறிய நமீதா, அவருக்கு டீ போட்டுக் கொடுத்து தன்னை தங்கையாக நினைத்துக் கொள்ளும்படியும் கேட்டார்.

  வெளியேறிய நமீதா

  வெளியேறிய நமீதா


  நமீதாவின் இந்த செயல்பாடுகளால் ஒரே நாளில் அனைவரின் மனதிலும் ஸ்டார் ஆகி விட்டார் நமீதா. இறுதி போட்டி வரை சென்று, அனைவருக்கும் கடும் டஃப் கொடுப்பார் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக தவிர்க்க முடியாத காரணங்களால் நமீதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. இதை கமலும் உறுதி செய்தார்.

  உண்மை காரணம் என்ன

  உண்மை காரணம் என்ன

  மருத்துவ காரணங்களால் அவர் வெளியேறினார். நமீதாவிற்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாமரையுடன் ஏற்பட்ட தகராறால் நமீதா ரகளை செய்ததால், ரெட் கார்டு காட்டி வெளியேற்றப்பட்டார் என பல விதங்களில் தகவல் பரவியது. ஆனால் என்ன காரணத்திற்காக நமீதா பிக்பாஸ் வீட்டில் இருந்து வந்த ஒரு வாரத்திலேயே வெளியேறினார் என இதுவரை தெரியவில்லை.

   ரீஎன்ட்ரி கொடுக்கிறாரா

  ரீஎன்ட்ரி கொடுக்கிறாரா

  இதற்கிடையில் நம்பதகுந்த சில வட்டாரங்களில் விசாரித்த போது, நமீதா இன்னமும் பிக்பாஸ் செட்டில் தான் உள்ளாராம். விரைவில் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் ரீ என்ட்ரி கொடுக்க போகிறாராம். முதல் Wildcard என்ட்ரியாக ஷாலு ஷம்மு அல்லது நமீதா மாரிமுத்து வரலாம் என கூறப்படுகிறது. ரசிகர்கள் பலரும் நமீதாவை மீண்டும் போட்டியில் கொண்டு வர கேட்டதால் நமீதா, ரீ என்ட்ரி கொடுக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

  English summary
  reliable sources said that namitha was still in bigg boss set. she didn't go out from the set. she will re entre to bigg boss house soon. may it first wildcard round.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X