சுசி கணேசன் இயக்கத்தில் சினிமாவாகும் வேலுநாச்சியார் கதை.. லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடிக்கிறாரா?
சென்னை: வீரமங்கை வேலு நாச்சியாரின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இதில் நடிகை நயன்தாரா நடிக்கலாம் என தெரிகிறது.
பிரபலங்களின் பயோபிக் படங்கள் இப்போது தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகின்றன.
வாழ்க்கை வரலாற்றுக் கதைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு இருப்பதால், அந்த கதைகள் சினிமாவாக்கப்படுகின்றன.

ராஜமவுலி பாகுபலி
கூடவே வரலாற்றுக் கதைகளின் பக்கமும் சினிமா இயக்குனர்களின் ஆர்வம் திரும்பி இருக்கிறது. இயக்குனர் ராஜமவுலி பாகுபலி கதையை உருவாக்கிய பின் இந்த ஆர்வம் அதிகரித்து இருக்கிறது. இந்தியில் நடிகை கங்கனாவின் மணிகர்னிகா உட்பட சில படங்கள் கடந்த சில வருடங்களுக்கு முன் வெளியாயின.

பொன்னியின் செல்வன்
இப்போது இயக்குனர் மணிரத்னம் பொன்னியின் செல்வன் வரலாற்றுக் கதையை இயக்கி வருகிறார். இரண்டு பாகமாக உருவாகும் இந்த படம் பிரமாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்படுகிறது. இதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார் உட்பட பலர் நடிக்கின்றனர்.

ராமர் பிரபாஸ்
பிரபாஸ் நடிக்கும் ஆதிபுருஷ் படம், ராமாயண காவியத்தின் ஒரு பகுதி எனக் கூறப்படுகிறது. இதில் பிரபாஸ் ராமராகவும் ராவணனாக சைஃப் அலிகானும் நடிக்க இருக்கின்றனர். இந்தப் படத்துக்கும் எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இந்நிலையில், வீரமங்கை வேலுநாச்சியார் வாழ்க்கை கதையும் சினிமாவாகிறது.

வேலு நாச்சியார்
பதினேழாம் நூற்றாண்டில் சிவகங்கைப் பகுதியில் ஆட்சி புரிந்தவர், வீரமங்கை ராணி வேலுநாச்சியார். அவர் 1780 முதல் 1789 ஆம் ஆண்டு வரை அங்கு ஆட்சி செய்தவர். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய பெண் தலைவியான இவர், இந்தியாவின் முதல் பெண் விடுதலைப் போராட்ட வீராங்கனை.

சுசி கணேசன்
வீரமும் போராட்டமும் நிறைந்த வேலு நாச்சியாரின் வாழ்க்கைக் கதையை இயக்குனர் சுசி கணேசன் இயக்குகிறார். இவர் தமிழில், பைவ் ஸ்டார், விரும்புகிறேன், திருட்டுப் பயலே, விக்ரம், ஸ்ரேயா நடித்த கந்தசாமி, திருட்டுப் பயலே 2 ஆகிய படங்களை இயக்கியவர்.

லேடி சூப்பர்ஸ்டார்
இப்போது திருட்டுப் பயலே 2 படத்தின் இந்தி ரீமேக்கை இயக்கியுள்ளார். இந்த கேரக்டருக்கு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மிகச் சரியாகப் பொருத்துவார் என்று கூறப்பட்டதை அடுத்து, அவரிடம் பேசி வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.


Click it and Unblock the Notifications











