»   »  கமலுக்காக அட்ஜஸ்ட் செய்வாரா நயன்தாரா?

கமலுக்காக அட்ஜஸ்ட் செய்வாரா நயன்தாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil
இந்தியன் 2 -வில் நயன்தாராவா ?

சென்னை: உலக நாயகன் கமல் ஹாஸனுக்காக நயன்தாரா தனது கொள்கையை தளர்த்துவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாஸன் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளார். இந்தியன் 2 படத்தின் பெயரை ஹீலியம் பலூனில் எழுதி அதை தைவானில் பறக்கவிட்டு அசத்தலாக அறிமுகம் செய்து வைத்தார் ஷங்கர்.

இந்தியன் 2 படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது.

ஷங்கர்

ஷங்கர்

பிரமாண்ட இயக்குனரான ஷங்கரின் படத்தில் நடிக்க ஹீரோயின்கள் ஆவலாக உள்ளனர். இந்நிலையில் தான் ஷங்கர் நயன்தாராவை தனது படத்தில் நடிக்க வைக்க விரும்புவதாக கூறப்படுகிறது.

ஹீரோ

ஹீரோ

கிளாமராக நடிக்க மாட்டேன், மரத்தை சுற்றி சுற்றி வந்து டூயட் பாடும் ஹீரோயினாக நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கன்டிஷன் போட்டுள்ளார். ஹீரோவுக்கு நிகரான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்புகிறார்.

ஹீரோயின்

ஹீரோயின்

தனது கொள்கையை தளர்த்தி கே. எஸ். ரவிக்குமாருக்காக ஜெய் சிம்ஹா படத்தில் காதல் நாயகியாக நடித்தார் நயன்தாரா. இந்நிலையில் கமல் ஹாஸன் மற்றும் ஷங்கருக்காகவும் தனது கொள்கையை மீண்டும் தளர்த்துவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

திருமணம்

திருமணம்

நயன்தாரா தனது காதலரான இயக்குனர் விக்னேஷ் சிவனை இந்த ஆண்டு திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் அவர் படங்களில் நடிக்க பல கன்டிஷன்கள் போடுவதாக பேச்சு கிளம்பியுள்ளது.

English summary
Buzz is that Nayanthara may act as the leading lady of Kamal Haasan starrer Indian 2 to be directed by Shankar. Will Nayanthara adjust for Kamal Haasan?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil