Nayanthara: கேன்ஸ் திரைப்பட விழாவில் நயன்தாரா? விக்னேஷ் சிவன் போட்ட பதிவால் ரசிகர்கள் எதிர்பார்ப்பு!

சென்னை: கணவர் விக்னேஷ் சிவன் உடன் நடிகை நயன்தாராவும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்வாரா? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

கடந்த ஆண்டு இந்தியாவை அங்கீகரிக்கும் விதமாக கேன்ஸ் திரைப்பட விழா நடைபெற்றது. அதில், ஏகப்பட்ட இந்திய நடிகர்கள் பங்கேற்றனர்.

நடிகை நயன்தாராவும் பங்கேற்பார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தங்களுக்கு அழைப்பே வரவில்லை என விக்னேஷ் சிவன் சொல்லி இருந்த நிலையில், தற்போது கேன்ஸ் நகரில் இருக்கும் வீடியோக்களையும் போட்டோக்களையும் ஷேர் செய்துள்ளார் விக்னேஷ் சிவன்.

பூஜா ஹெக்டே முதல் தமன்னா வரை: கடந்த ஆண்டு நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் நடுவராக பங்கேற்றார். மேலும், நடிகைகள் தமன்னா, பூஜா ஹெக்டே, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கலக்கினர்.

கமல்ஹாசன், ஏ.ஆர். ரஹ்மான், மாதவன், பா. ரஞ்சித் உள்ளிட்ட பலரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கடந்த ஆண்டு கலந்து கொண்டனர்.

இஷா குப்தா முதல் மிருணாள் தாகூர் வரை: இந்த ஆண்டு தொடங்கி உள்ள கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்திய நடிகைகள் பலரும் பங்கேற்று வருகின்றனர். பாலிவுட் நடிகை இஷா குப்தா, சீதாராமம் நடிகை மிருணாள் தாகூர், சாரா அலி கான், ஊர்வசி ரவுத்தேலா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.

Will Nayanthara attend Cannes 2023 Film Festival with her husband Vignesh Shivan?

இந்நிலையில், நடிகை நயன்தாராவும் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ள நிலையில், தென்னிந்திய ரசிகர்கள் எதிர்பார்ப்புகளை எகிற வைத்துள்ளனர்.

கேன்ஸில் விக்னேஷ் சிவன்: இயக்குநர் விக்னேஷ் சிவன் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு சென்றுள்ள நிலையில், அங்கே எடுத்துக் கொண்ட போட்டோக்களையும், வீடியோக்களையும் தனது இன்ஸ்டாகிராம் ரீலில் ஷேர் செய்து வருகிறார்.

Will Nayanthara attend Cannes 2023 Film Festival with her husband Vignesh Shivan?

சமீபத்தில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த சிஎஸ்கே போட்டிகளை மனைவி நயன்தாராவுடன் சென்று பார்த்த நிலையில், தனியாக விக்னேஷ் சிவன் கேன்ஸுக்கு சென்றிருக்க மாட்டார் தலைவி நயன்தாராவும் நிச்சயம் கூடவே சென்றிருப்பார் என ரசிகர்கள் விக்னேஷ் சிவனிடம் சொல்லுங்க ப்ரோ என பலரும் கேட்டு வருகின்றனர்.

நயன்தாரா பங்கேற்பாரா?: ஷாருக்கானின் ஜவான் படத்தின் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைக்க உள்ள லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா இந்த ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழா சுமார் 10 நாட்களாக நடைபெற உள்ள நிலையில், கேன்ஸ் 2023 ரெட் கார்ப்பெட்டில் கவர்ச்சி உடையில் கலந்து கொண்டு கலக்குவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.

Will Nayanthara attend Cannes 2023 Film Festival with her husband Vignesh Shivan?

இயக்குநர் விக்னேஷ் சிவன் தனியாகத்தான் சென்றிருக்கிறாரா? அல்லது நயன்தாரா உடன் சென்றிருக்கிறாரா என்பதை விரைவில் அவரது இன்ஸ்டாகிராம் போஸ்ட்டுகளே அறிவித்து விடும் என ரசிகர்கள் வெயிட் பண்ணி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X