அஜித் மாதிரி கண்டிசன் போட்ட நயன்தாரா.. புதிய சிக்கலில் பிகில் படக்குழு.. விஜய்தான் பேசணும் போல!
பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொள்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
Recommended Video
சென்னை: பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொள்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது.
நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வரும் செப்டம்பர் 19ம் தேதி, நாளை நடக்கிறது.
சென்னை லியோ முத்து உள் அரங்கில் இந்த விழா நடக்க உள்ளது. அங்கு இருக்கும் தனியார் கல்லூரியில் இந்த விழா நடக்க உள்ளது. இதற்கான விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

எப்படி
இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை நயன்தாரா கலந்து கொள்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது. பொதுவாக நடிகர் அஜித் சினிமா விழாக்கள் எதிலும் கலந்து கொள்ள மாட்டார். பொது விழாக்களில் அஜித்தை பார்ப்பதே கடினம்.

அஜித் எப்படி
அதேபோல் தன்னுடைய படத்தின் இசை வெளியீட்டு விழாக்களில் கூட அஜித் கலந்து கொள்ள மாட்டார். எங்கும் விருது வாங்க கூட அவர் செல்ல மாட்டார். இதே பாணியை தற்போது நடிகை நயன்தாராவும் கடைபிடித்து வருகிறார். அவரும் இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்வது கிடையாது.

எப்படி சொல்கிறார்
நயன்தாராவுக்கு சம்பளமாக கிட்டத்தட்ட 5 கோடி அளிக்கப்படுகிறது. ஆனால் இதற்கு ஒப்பந்தம் செய்யும் போதே, அவர் விளம்பரம் செய்ய வர மாட்டேன். இசை வெளியீட்டு விழாக்களில் கலந்து கொள்ள மாட்டேன் என்று கண்டிப்பாக கூறி விடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

செல்வதில்லை
இப்போதெல்லாம் அவர் எந்த படத்திற்கும் புரமோஷன் விழாவுக்கு செல்வதில்லை. ஏன் அவர் தன்னுடைய சொந்த படங்களுக்கும் கூட இப்போதெல்லாம் விளம்பரம் செய்ய செல்வதில்லை. அஜித் பாணியை நயன்தாரா இதில் தீவிரமாக கடைபிடிக்கிறார்.

இல்லை
இதனால் தற்போது பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நயன்தாரா கலந்து கொள்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்காக அவரிடம் படக்குழு பேசி உள்ளது. ஆனால் நயன்தாரா இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள விருப்பம் தெரிவிக்கவில்லை என்கிறார்கள்.

விஜய் பேசினால்
ஒருவேளை விஜய் நேரடியாக பேசினால்தான் நயன்தாரா வருவாரா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுவரை பிகில் படம் தொடர்பாக வெளியான போஸ்டர்கள் எதிலும் நயன்தாரா இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











