இளம் வயது சிவகாமி தேவியாக நடிக்கிறாரா.. நெட்பிளிக்ஸின் பாகுபலி வெப்சீரிஸில் களமிறங்கும் நயன்தாரா?

சென்னை: மற்ற முன்னணி நடிகைகளை தொடர்ந்து லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும் வெப்சீரிஸில் அடியெடுத்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதுவும் நெட்பிளிக்ஸ் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ள பாகுபலிக்கு முந்தைய கதை என்ற பெயரில் இந்த வெப்சீரிஸ் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, அமலா பாலை தொடர்ந்து நயன்தாராவும் வெப்சீரிஸ் பக்கம் கவனத்தை செலுத்துவாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

வெப்சீரிஸ் தான் வியாபாரமே

வெப்சீரிஸ் தான் வியாபாரமே

ஒடிடி தளங்களான அமேசான் பிரைம், நெட்பிளிக்ஸ், ஜி5, டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற பல்வேறு ஒடிடி தளங்களுக்கு வியாபாரமே வெப்சீரிஸ் தான். என்னதான் பெரிய நடிகர்களின் படங்களை அதிக விலை கொடுத்து வாங்கி வெளியிட்டாலும், இரண்டு மணி நேரம் தான் ரசிகர்களை இருக்க வைக்க முடியும்.

அதிக நேரம்

அதிக நேரம்

ஆனால், சுமார் 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை வெப்சீரிஸ் மற்றும் ஆந்தாலஜி படைப்புகளால் மட்டுமே ரசிகர்களை ஒடிடியில் தங்க வைக்க முடியும். எவ்வளவு நேரம் ரசிகர்கள் இருக்கிறார்களோ அவ்வளவும் ஒடிடி தளங்களுக்கு வியாபாரம் தான்.

நடிகைகள் தான் டார்கெட்

நடிகைகள் தான் டார்கெட்

பாலிவுட்டை போல கோலிவுட்டில் முன்னணி நடிகர்கள் பலரும் இன்னமும் வெப்சீரிஸ் பக்கம் வர யோசித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகைகள் தான் அவர்களது டார்கெட்டாக உள்ளது. காஜல் அகர்வால் லைவ் டெலிகாஸ்ட் வெப்சீரிஸ் மூலம் அறிமுகமானார். தமன்னாவின் நவம்பர் ஸ்டோரி மிகப்பெரிய வெற்றியடைந்தது. சமந்தாவின் தி ஃபேமிலி மேன் 2 சர்ச்சையை கிளப்பி காசு பார்த்தது. அமலா பாலின் டைம் லூப் வெப்சீரிஸ் சக்கைப் போடு போட்டு வருகிறது.

அடுத்து நயன்தாரா

அடுத்து நயன்தாரா

இந்நிலையில், அடுத்ததாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை ஒடிடி பக்கம் ஈர்க்க மிகப்பெரிய முயற்சியை நெட்பிளிக்ஸ் ஒடிடி தளம் செய்து வருகிறது. நெட்பிளிக்ஸ் தயாரிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாக உள்ள படைப்பில் நடிகை நயன்தாரா நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பாகுபலிக்கு முன்பு

பாகுபலிக்கு முன்பு

இயக்குநர் ராஜமெளலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தின் ப்ரீக்வெல் ஆக Bahubali before the beginning என்கிற டைட்டிலில் உருவாக உள்ள வெப்சீரிஸில் தான் நயன்தாரா நடிக்கப் போகிறார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ராஜமாதாவா

ராஜமாதாவா

ராஜமாதா சிவகாமி தேவியின் இளம் வயது கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்க உள்ளாரா என்கிற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. ராஜாமாதா கதாபாத்திரத்தில் அல்ல, பாகுபலியின் அம்மா கதாபாத்திரத்தில் தான் நயன்தாரா நடிக்கப் போகிறார் என்றும் பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.

தேவையில்லாத ஆணி

தேவையில்லாத ஆணி

பாகுபலி படம் நல்லபடியாக முடிந்து விட்டது. அதன் முன் கதையை எடுக்கிறேன். பின் கதையை எடுக்கிறேன் என கெடுத்து விடாதீர்கள் என அனுஷ்காவின் ரசிகர்கள் இந்த வெப்சீரிஸே தேவையில்லாத ஆணி என கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.

நம்பலாமா

நம்பலாமா

இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இது ஒரு வதந்தியாகவே பார்க்கப்படும் என்றும், நயன்தாரா சினிமாவில் படு பிசியாக உள்ள நிலையில், நிச்சயம் நெட்பிளிக்ஸின் வெப்சீரிஸில் நடிப்பது சந்தேகம் தான் என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருப்போம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X