twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நிஜமான பெண்ணியம் பேசுமா.. நேர் கொண்ட பார்வை!

    |

    Recommended Video

    தல ரசிகர்கள் கேட்காமலேயே அப்டேட் கொடுத்துள்ளார் ஹெச். வினோத்.

    சென்னை: கோலிவுட்டின் தற்போதைய ஹாட் டாபிக் தல அஜித்தின் 59-வது பட டைட்டில் வெளியானது தான். கவுண்ட்டவுன் வைத்து தகவல்களை அளித்து வரும் நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென படத்தின் டைட்டிலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டிருக்கிறது "தல 59" படக்குழு.

    இந்த படம் கடந்த 2016-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே. படத்தின் பர்ஸ்ட் லுக்-கும் பிங்க் பட போஸ்டர் போன்றே அமைந்துள்ளது.

    ஹிந்தியில் அமிதாப் மேலே இருக்க டாப்ஸி உட்பட 3 ஹீரோயின்களும் குற்றவாளிக் கூண்டில் நிற்பதுபோல் போஸ்டர் அமைந்திருக்கும். தமிழிலும் மாற்றமில்லாமல் அதே போன்றுதான் வெளியாகியுள்ளது.

    சொன்னா கேளுங்கப்பா ப்ளீஸ்: ரசிகர்களிடம் கெஞ்சிய விஜய்- வீடியோ இதோ சொன்னா கேளுங்கப்பா ப்ளீஸ்: ரசிகர்களிடம் கெஞ்சிய விஜய்- வீடியோ இதோ

    வித்யாபாலன்

    வித்யாபாலன்

    ரீமேக் என்றாலும் தமிழுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஹிந்தியில் சில நிமிடங்கள் மட்டுமே வந்த அமிதாப் மனைவி கதாபாத்திரம் தமிழில் நீட்டிக்கப்பட்டு, அஜித் மனைவியாக வித்யா பாலன் நடிப்பதும் உறுதியாகியுள்ளது. ஆனால் படத்தின் இயல்பை மாற்றிவிடக்கூடாது என்பதே பிங்க் படத்தை பார்த்தவர்களின் கருத்தாக இருக்கும்.

    மாறாம இருந்தால் நல்லது

    மாறாம இருந்தால் நல்லது

    அதிலும் குறிப்பாக படத்தின் கிளைமேக்ஸில் வரும் நீதிமன்றக் காட்சி. இறுதி விசாரணையில் "ஆர் யூ அ வெர்ஜின்" என்றுதான் தனது விசாரணையை ஆரம்பிப்பார் அமிதாப். (முழு காட்சியையும் பார்க்க விரும்புகிறவர்கள் யூ டியூபில் பார்க்கலாம் அல்லது அஜித் நடிப்பில் தான் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் மே 1 வரை பொறுத்துதான் ஆக வேண்டும். இந்த காட்சி மாற்றப்படாது என்ற நம்பிக்கையில்)

    கலாச்சார பாதுகாவலர்கள்

    கலாச்சார பாதுகாவலர்கள்

    அப்போது இந்த படம் தமிழில் வெளியாகி இருந்தால், வசனங்களை மாற்ற வேண்டும், கலாச்சாரம் சீரழிகிறது என்ற சர்ச்சை கண்டிப்பாக எழுந்திருக்கும். ஆனால் தற்போது பெண்கள் குடிப்பதும் புகைப்பதும் தான் பெண்ணியம் என்ற கருத்தை முன் வைப்பது போல் படங்கள் வரும் வேளையில், உண்மையிலேயே பெண்ணியம் பேசும் இது போன்ற திரைப்படங்கள் வெளியாக வேண்டும்.

    நிஜமான பெண்ணியம் பேசுமா

    நிஜமான பெண்ணியம் பேசுமா

    சமுதாயம் எதை வைத்தெல்லம் ஒரு பெண்ணை எடை போடும் என்பதை பிங்க் அப்பட்டமாக கூறியிருக்கும். பாரதியாரின் பெண்களுக்கான தகுதியாக கூறிய நேர் கொண்ட பார்வை என படத்தின் பெயரை வைத்ததோடு மட்டுமல்லாமல், படத்திலும் நிஜமான பெண்ணியம் பேசப்பட்டிருக்கும் என நம்புவோம்.

    English summary
    Ajith starring Nerkonda Paravai has created a wave among film buffs and its a million dollar question that whether the movie will talk the real feminism?.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X