பெட்டி வருவதற்கு முன் நான் எடுக்க மாட்டேன்.. பெட்டி வந்ததும் நான் எடுத்துருவேன்.. என்னங்க நிரூப்?

சென்னை: ரூ. 3 லட்சம் பணப்பெட்டியுடன் சரத்குமார் அதிரடியாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்ததும் ரசிகர்கள் வாயடைத்து போனார்கள்.

இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவில் நிரூப் தான் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு வெளியேறி விடுவேன் என மணிக்கு முந்நூறு தடவை சொல்லும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதே நிரூப் தான் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு யார் வெளியேறுவார்? நானெல்லாம் அப்படி போக மாட்டேன் என தாமரையிடம் சொன்னார் என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சோந்தி நிரூப்

பச்சோந்தி நிரூப்

நேரத்துக்கு தகுந்தாற் போல தனது பேச்சையும் செயலையும் மாற்றி மாற்றி எப்போதுமே ஸ்ட்ராட்டஜி மைண்ட் உடனே இந்த பிக் பாஸ் கேமை விளையாடி வருகிறார் நிரூப் என ரசிகர்கள் அவருக்கு பச்சோந்தி நிரூப் என்றே பெயர் வைத்து விட்டனர். அபிஷேக் ராஜா தான் எனக்கு போட்டி என நிரூப் சொன்னதை கேட்ட ரசிகர்கள் அவருடனே உன்னையும் சேர்த்து வெளியே அனுப்பி இருக்க வேண்டும் என கலாய்த்து வருகின்றனர்.

3 லட்சம்னா சும்மாவா

3 லட்சம்னா சும்மாவா

கடந்த சீசனில் 5 லட்சம் ரூபாய் பணப்பெட்டி வந்ததும் கேபி அதை எடுத்துக் கொண்டு கம்பி நீட்டினார். தற்போது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியே மொக்கை போட்டியாளர்களால் டிஆர்பி குறைந்து விட்டதால் வெறும் 3 லட்சம் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது என்றும் இவர்களுக்கு 3 லட்சமே அதிகம் என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

நான் எடுத்துருவேன்

நான் எடுத்துருவேன்

பணப்பெட்டியை பார்த்ததும் தான் முன்பு சொன்னதையே மறந்து விட்டு யாரும் எடுக்க வில்லை என்றால் நான் எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பிடுவேன் என நிரூப் ஹவுஸ்மேட்கள் அனைவர் முன்னிலையிலும் சொல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ள 3வது புரமோவில் இடம்பெற்றுள்ளது.

மொக்கை பண்ண சிபி

மொக்கை பண்ண சிபி

ஒவ்வொரு இடத்திலும் தனது மனசுக்கு தோன்றுவதை பேசி வரும் சிபி எடுத்துட்டு போறேன்னா எடுத்துட்டு போடா என நிரூப்பை மொக்கை பண்ணிய காட்சிகளும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளன. இந்த வாரம் சிபி எவிக்ட் ஆகாமல் ஃபைனல்ஸ் வரை வர வேண்டும் என ஏகப்பட்ட ரசிகர்கள் அவருக்கு ஓட்டுப் போட்டு வருகின்றனர்.

தாமரைக்கு சொல்றாரு

தாமரைக்கு சொல்றாரு

நிரூப் தான் அந்த பெட்டியை எடுத்துக் கொள்ளப் போகிறேன் என்று சொல்வதே தாமரை அந்த பெட்டியுடன் வெளியேற வேண்டும் என்பதற்காகத் தான் என ரசிகர்கள் கெஸ் செய்து வருகின்றனர். 3 லட்சம் வேண்டாம் 5 லட்சம் அல்லது 10 லட்சம் வரும் வரை வெயிட் பண்ணுங்க தாமரை என தாமரை ரசிகர்களே பணத்தை எடுத்துக் கொண்டு ஓட சொல்கின்றனர்.

பாவனி எடுப்பாரா

பாவனி எடுப்பாரா

கடந்த வாரம் கமல் சார் எபிசோடுக்கு முன்னதாக கதவை திறந்து விட்டால் இப்படியே ஓடிவிடுவோம் என சொன்ன பாவனி மற்றும் தாமரை இருவரில் ஒருவர் பெட்டியை தூக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ஒருவேளை பாவனி பணப்பெட்டியுடன் வெளியேறினாலும் அது நல்ல முடிவு என்பதே பாவனி ஆர்மியினரின் ஆசையாக உள்ளது.

Recommended Video

Bigg Boss வீட்டை விட்டு 3 லட்சம் பணத்துடன் வெளியேறிய Thamarai Selvi | Sarathkumar, Parampara
யார் எடுப்பா?

யார் எடுப்பா?

சரத்குமார் உள்ளே வந்து இவ்வளவு பெரிய தொகையை வைத்திருக்கும் நிலையில், இதற்கு மேல் பணம் உயருமா அல்லது இல்லாமல் போய் விடுமா? என்பது தெரியவில்லை. ராஜு, அமீர், பிரியங்கா, சிபி, நிரூப், தாமரை மற்றும் பாவனி ஆகிய 7 பேரில் அந்த பெட்டியை எடுக்கப் போவது யார்? என்பதை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X