"ரஜினியுடன் மீண்டும் நடிப்பீர்களா குஷ்பு..?.. மாட்டேன்.... கமலுடன்... ம்ம்ம்ம்ம்ம்ம்....!"
சென்னை: மீண்டும் ரஜினியுடன் இணைந்து நடிக்கும் எண்ணமில்லை எனத் தெரிவித்துள்ள நடிகை குஷ்பு, மீண்டும் கமலுடன் நடிக்க விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளமான டுவிட்டர் மூலமாக தொடர்ந்து ரசிகர்களுடன் தொடர்பில் உள்ள பிரபலங்களில் நடிகை குஷ்புவும் குறிப்பிடத்தக்கவர். டுவிட்டர் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு உடனுக்குடன் பதிலளித்து வருகிறார் குஷ்பு.
அந்தவகையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரசிகர்களின் கேள்விக்கு குஷ்பு பதிலளித்திருந்தார். அவற்றில் சுவாரஸ்யமான சில கேள்வி - பதில்களின் தொகுப்பு இதோ...
ரஜினியுடன் மீண்டும்...
கேள்வி : ரஜினியுடன் மீண்டும் நடிப்பீர்களா...?
குஷ்பு : மாட்டேன்.

அப்போ கமல்...
கேள்வி : கமலுடன் நடிக்க வாய்ப்பு வந்தால்...?
குஷ்பு : ம்ம்ம்ம்ம்ம்ம்....

அரசியல்...
கேள்வி : மீண்டும் அரசியல் பிரவேசம் குறித்து....?
குஷ்பு : தற்போதைக்கு மீண்டும் அரசியலில் நுழையும் திட்டமில்லை.

இன்றைய இளைஞர்கள்...
கேள்வி : உங்கள் பார்வையில் இன்றைய இளைஞர்கள் தொழில்நுட்பத்தை சரியாகப் பயன்படுத்துகிறார்களா...?
குஷ்பு : இல்லை.

கார்த்திக் படங்கள்...
கேள்வி : கார்த்திக் படங்களில் பிடித்தது...?
குஷ்பு : கார்த்திக் நடித்ததில் மெளன ராகம் மற்றும் அக்னி நட்சத்திரம் ஆகியவை மிகவும் பிடித்த படங்கள்.

மதகதராஜா....
கேள்வி : மதகதராஜா ரிலீசாகுமா...?
குஷ்பு : சுந்தர்.சி இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'மதகஜராஜா' திரைப்படம் வெளிவருவதற்கான அறிகுறிகள் இல்லை.
என் ரியல் ஹீரோ...
கேள்வி : உங்கள் ரியல் ஹீரோ யார்?
குஷ்பு : என் கணவர் சுந்தர்.சி தான்.
என் கணவர் தான்...
கேள்வி :உங்கள் இருவரில் யார் முதலில் காதலைச் சொன்னது ?
குஷ்பு : என் கணவர் தான். கடந்த 1995ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி அவர் தனது காதலைச் சொன்னார்.

பொருத்தமான ஜோடி...
கேள்வி : திரையில் உங்கள் கணவருக்கு ஏற்ற நாயகி யார்?
குஷ்பு : அது கதாபாத்திரத்தைப் பொறுத்தது.

இயக்கம்...
கேள்வி : உங்கள் கணவரைப் போல் நீங்களும் படங்களை இயக்குவீர்களா...?
குஷ்பு : தெரியவில்லை.

சேலை தான் பெஸ்ட்...
கேள்வி : பெரும்பாலும் சேலையில் தோன்றுகிறீர்களே..?
குஷ்பு : எனக்கு மிகவும் பிடித்த வசதியான உடை சேலை தான்' என இவ்வாறு ரசிகர்களின் கேள்விகளுக்கு அவர் பதிலளித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











