twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வலிமை தியேட்டர் ரிலீசுக்கு வேட்டு வைக்குமா ஒமிக்ரான்? அப்படியே வெளியானாலும் அந்த சிக்கல் இருக்கே?

    |

    சென்னை: நடிகர் அஜித் குமாரின் வலிமை திரைப்படத்தின் டிரைலர் இன்னும் சற்று நேரத்தில் வெளியாக உள்ளது.

    Recommended Video

    தெறிக்கும் 'வலிமை' டிரைலர்..! மகிழ்ச்சிக்கடலில் AK ரசிகர்கள்..!

    2 ஆண்டுகளாக வலிமை படத்தின் ரிலீசுக்காக காத்திருக்கும் ரசிகர்கள் வலிமை படத்தின் டிரைலரை வேற மாறி ரெக்கார்டு படைக்க காத்திருக்கின்றனர்.

    இந்நிலையில், வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகுமா? அல்லது வெளியானாலும் வசூலை குவிக்குமா? என ஏகப்பட்ட கேள்விகள் எழுந்துள்ளன. வலிமை படத்தின் வசூலை பாதிக்கும் காரணிகள் என்ன என்ன என்பது குறித்து இங்கே பார்ப்போம்.

    மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு

    மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு

    2021ம் ஆண்டே தமிழ் சினிமாவின் அதிக எதிர்பார்ப்பு கொண்ட படமாக இருந்த அஜித் குமாரின் வலிமை திரைப்படம் இந்த ஆண்டு ரிலீசாகாத நிலையில், 2022ம் ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு படமாக மாறி உள்ளது வலிமை திரைப்படம். போனி கபூர் தயாரிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் அஜித் குமார், ஹூமா குரேஷி, கார்த்திகேயா நடிப்பில் உருவாகி உள்ளது வலிமை.

    புரமோஷனே இல்லை

    புரமோஷனே இல்லை

    போனி கபூர் தயாரிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக வெளியாக உள்ள வலிமை திரைப்படத்திற்கு எந்தவொரு பெரியளவில் ஆன புரமோஷனும் நடைபெறவில்லை. படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இன்னமும் வலிமை ஒடிடி ரிலீசா? அல்லது தியேட்டர் ரிலீசா? என்கிற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

    தொடர்ந்து ஓடும் ராஜமெளலி

    தொடர்ந்து ஓடும் ராஜமெளலி

    ஜனவரி 7ம் தேதி வெளியாக உள்ள இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் புரமோஷனுக்காக மும்பை, சென்னை, ஹைதராபாத், கேரளா என இயக்குநர் ராஜமெளலி மற்றும் அந்த படத்தின் ஹீரோக்களான ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் தொடர்ந்து ஒவ்வொரு நகரத்திற்கும் சென்று பெரிய அளவில் புரமோஷன் நடத்தி வருகின்றனர். ஆனால், வலிமை படத்திற்கு சமூக வலைதளங்களில் கூட முறையான புரமோஷனை போனி கபூர் செய்யவில்லை என்கிற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    அந்த ஒரு பெயர் போதும்

    அந்த ஒரு பெயர் போதும்

    பொதுவாகவே நடிகர் அஜித் படங்களுக்கு புரமோஷன் நிகழ்ச்சிகள் நடத்தப்படவில்லை. அஜித் குமார் என்கிற அந்த ஒரு பெயரே மற்ற அனைத்து புரமோஷன்களையும் தூக்கி சாப்பிட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், தமிழ் தவிர மற்ற மொழிகளிலும் வலிமை படத்தை வெளியிட உள்ள நிலையில், தயாரிப்பு தரப்பு மற்ற நடிகர்களை வைத்தாவது புரமோஷன்களை செய்திருக்க வேண்டும் என்பது நிபுணர்களின் கணிப்பாக உள்ளது.

    ஒமிக்ரான்

    ஒமிக்ரான்

    நடிகர் அஜித் குமாரின் வலிமை படத்திற்கு மட்டுமல்ல ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் மற்றும் பிரபாஸின் ராதே ஷ்யாம் உள்ளிட்ட படங்களுக்கும் பெரிய பிரச்சனையாக ஒமிக்ரான் பரவல் மிகப்பெரிய எதிரியாக மாறி உள்ளது. திரையரங்குகளை மூட வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது. பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள் போடப்பட்டு இருப்பதால் இரவு நேர காட்சிகள் ரத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லியின் திரையரங்குகள் முடக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    வசூல் பாதிக்கும்

    வசூல் பாதிக்கும்

    திரையரங்குகள் முழுவதுமாக மூடப்படவில்லை என்றாலும், எதிர்பார்க்கும் படியே வலிமை திரைப்படம் திரையரங்குகளில் வெளியானாலும் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி என்கிற அறிவிப்பு இரவு நேர ஊரடங்கு மற்றும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பயம் என பல விஷயம் வலிமை படத்தின் வசூலை பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எத்தனை தடைகள் வந்தாலும் வலிமை படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பம். வலிமை படக்குழு இந்த பிரச்சனைகளை சரி செய்ய என்ன திட்டம் தீட்டப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

    English summary
    Due to Omicron cases raises day by day several states put a several restrictions and Cinema halls expected to shut down soon. This are the reason will affect Valimai Box office fear raises in production team.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X