முதல் எபிசோட் மட்டும் வெள்ளித்திரையில்... அடுத்தது வலைத்தொடராம்... புது முயற்சியில் பொ.செ.டீம்?
சென்னை: பொன்னியின் செல்வனின் முதல் எபிசோடை மட்டுமே தியேட்டரில் ரிலீஸ் செய்ய இருப்பதாகக் கூறப்படுகிறது.
கல்கியின் வரலாற்று நாவலான பொன்னியின் செல்வனை படமாக்கி வருகிறார் இயக்குனர் மணிரத்னம். தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாள மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வராயா லட்சுமி உட்பட ஏராளமான நடிகர், நடிகைகள் நடிக்கின்றனர்.

கீர்த்தி சுரேஷ்
இந்நிலையில், இதில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த கீர்த்தி சுரேஷ் திடீரென விலகினார். ரஜினிகாந்த் படத்தில் நடிப்பதற்காக அவர், இதில் இருந்து விலகியதாகக் கூறப்பட்டது.

ஏ.ஆர்.ரஹ்மான்
படத்துக்காக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி படகு ஓட்டி பயிற்சி பெற்றுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் தாய்லாந்தில் நடந்து வருகிறது.

சரத்குமார்
இதற்கிடையே, இந்த படத்தில் சரத்குமார் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் நீண்ட தாடி வளர்த்து வருகிறார். பொங்கலுக்குப் பிறகு பொன்னியின் செல்வன் பட ஷூட்டிங்கில் இணைகிறார் என்று கூறப்படுகிறது.

வெப் சிரீயஸாக...
இந்நிலையில் இதன் ஒரு எபிசோடை மட்டும் திரைப்படமாக எடுத்துவிட்டு, மற்ற 23 எபிசோடுகளை வெப் சிரீயஸாக எடுக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாம். திரையில் வெளியிடுவதை விட வெப் சீரிஸில் வெளியிட்டால் அதிக லாபம் கிடைக்கும் என்பதால் இந்த முடிவு என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











