'நிர்வாணமாக நடிப்பதைவிட நீங்க செஞ்சது ரொம்ப மோசம்'... புரிஞ்சு பேசுங்க ஓவியா!

90 எம்எல் படத்துக்கு ஆதரவாக நடிகை ஓவியா அளித்த பேட்டி எதிர்வினையை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

90 ML Movie Sneak Peek: முகம் சுளிக்க வைக்கும் ஓவியாவின் 90 எம்.எல். ஸ்னீக் பீக்- வீடியோ

சென்னை: சிலர் தெளிவாக பேசுவதாக நினைத்துக் கொண்டு மற்றவர்களைக் குழப்புவார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் நடிகை ஓவியா.

சாதாரண மனிதர்கள் இப்படி இருந்தால் அதன் தாக்கம் பெரிதாக இருக்காது. ஆனால், பல லட்சக்கணக்கான மக்கள் பின் தொடரும் தலைவனோ, தலைவியோ இப்படிப்பட்ட குழப்பவாதிகளாக இருக்கும் பட்சத்தில் அதன் பின்விளைவுகள் ஏராளம்.

ஓவியா விசயத்திலும் அப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது.

ஆபாச படம்

ஆபாச படம்

அனிதா உதீப் இயக்கத்தில் 90 எம் எல் படத்தில் நடித்துள்ளார் ஓவியா. இப்படம் நாளை மறுநாள் ரிலீசாக இருக்கிறது. இப்படத்தின் டிரெய்லர், ஸ்னீக் பீக் என எல்லாமே ஆபாச வசனங்களால் நிரம்பி வழிகிறது. இதற்கு ஒருபுறம் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வந்த வண்ணம் இருக்க, தான் செய்தது துளியளவும் தவறில்லை என பேட்டிகள் மூலம் திரும்பத் திரும்ப வலியுறுத்தி வருகிறார் ஓவியா.

நிர்வாணமாகவா நடித்தேன்...

நிர்வாணமாகவா நடித்தேன்...

இது தொடர்பான ஒரு பேட்டியில், ‘ஆணாதிக்கவாதிகள் என் படத்தைப் பார்க்க வேண்டாம், இது ஆணாதிக்கத்திற்கு எதிரான படம், நான் என்ன நிர்வாணமாகவா நடித்திருக்கிறேன், கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிப்பதில் தவறில்லை' என பக்கம் பக்கமாக பேசியிருக்கிறார் ஓவியா.

எது பெண்ணியம்

எது பெண்ணியம்

இவரின் இந்தப் பேச்சு, எது ஆணாதிக்கம், எது பெண்ணியம் என்ற தெளிவு இல்லாத அவரது மனநிலையை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ஓவியாவிற்கு மட்டுமல்ல பலருக்கும் இந்த தெளிவு இல்லை என்றே சொல்ல வேண்டும். உதாரணத்திற்கு ஆணாதிக்கம் என்ற பெயரில் ஆண் ஒருவன், ‘ஒரு பெரிய மலையில் இருந்து நான் மட்டும் தான் குதிப்பேன் நீ குதிக்கக்கூடாது என பெண் ஒருவரைத் தடுத்தால்', அது முட்டாள்தனம் என்பதை அவருக்கு புரிய வைக்க வேண்டும்.

முட்டாள்தனமான பேச்சு

முட்டாள்தனமான பேச்சு

அதிலிருந்து அவரை மீட்டுக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு மாறாக நீ இந்த மலையில் இருந்து குதித்தால், நான் எவரெஸ்ட்டில் இருந்து குதிப்பேன். ஏன் என்றால் நான் பெண்ணியவாதி' எனப் பேசினால் அது சரியாகுமா? அப்படித்தான் இருக்கிறது ஓவியாவின் பேச்சு.

பொறுப்பை உணர்ந்தாரா?

பொறுப்பை உணர்ந்தாரா?

பிக் பாஸ் வீட்டில் அவரது போலித்தனமில்லாத நடவடிக்கைகளுக்கும், வெளிப்படையான பேச்சிற்கும் மயங்கிய மக்கள், அவருக்கு இன்றளவும் தங்களது ஆதரவை அளித்து வருகின்றனர். மக்களின் இந்த அன்பு அவருக்கு பொறுப்பை தந்திருக்க வேண்டும். மாறாக புரட்சி என்கிற பெயரில் சமூகத்தை சீரழிக்கிற விசயங்களைச் செய்வேன் என பிடிவாதம் பிடிப்பது சரியல்ல.

புரிதல் வேண்டும்

புரிதல் வேண்டும்

கணவருக்கு மட்டுமே காட்டிய தன் உடலை மருத்துவர் முன்பு காட்ட ஒரு பெண் தயங்க மாட்டாள். காரணம் அது சிகிச்சை. அது வேறு இது வேறு என்ற புரிதல் அவளுக்கு நிச்சயம் இருக்கும். அதுபோலத் தான் காட்சிக்கு தேவைப்பட்டால் நிர்வாணமாக நடித்த பிரபல நடிகைகளும் இருக்கிறார்கள். ஆனால் அது எப்படியான காட்சி என்பது தான் இங்கே முக்கியம்.

விபரீத முயற்சி

விபரீத முயற்சி

முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் ஆண்களைப் போல் ஆபாசமாகப் பேசுவது தமிழ் சினிமாவிற்கு புதிதாக இருக்கும் என சிலர் இந்த விபரீத முயற்சியை எடுத்திருக்கலாம். ஆனால், இது தற்போது மக்களுக்குத் தேவையா என்பதை அவர்கள் ஏன் உணரவில்லை என்பது தான் வருத்தம். இருட்டு அறையில் முரட்டுக் குத்து, ஹர ஹர மகாதேவகி போன்ற படங்களே சமூகத்தை சீரழிக்கின்றன என்ற விவாதம் உள்ள நிலையில், 90 எம் எல் போன்ற படங்கள் மிகவும் அவசியமானதா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்.

ஓவியாவின் பேட்டி

ஓவியாவின் பேட்டி

ஓவியாவின் பேட்டிபடி, பெண்கள் என்றால் ஏதோ சாதிப்பவர்கள் என்ற பிம்பம் தான் திரையில் தோன்ற வேண்டுமா என்ற கேள்விக்கு வருவோம். நம்மில் இன்னும் பல பெண்கள் இன்னும் அடுப்படியையே தாண்டவில்லை. அவர்களுக்கு 36 வயதினிலே போன்ற படங்கள் நம்மாளும் ஏதாவது சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைக் கொடுக்கும். அதுபோன்ற படங்களைப் பார்க்கும் பெண்கள் தொழில் முனைவோர் ஆக உத்வேகம் பெறலாம்.

இது அவசியம் தானா?

இது அவசியம் தானா?

அதைவிடுத்து, நாலு பெண்கள் சேர்ந்தால் ஆபாசமாகப் பேசி சிரிப்பார்கள் அதை தான் நாங்கள் காட்டி இருக்கிறோம் என்றால், அதன் தேவை தான் என்ன. பெண்கள் பேசுவது அப்படித்தான் இருக்கிறது என்றால் இருந்து விட்டு போகட்டுமே. அது சம்பந்தப்பட்ட அனைத்து பெண்களுக்குமே தெரியுமே. அதனை படமாக்கிக் காட்ட வேண்டும் என்ற கட்டாயமில்லையே. இப்படத்தைப் பார்த்து விட்டு, பெண்களும் ஆண்களைப் போல் பொதுஇடங்களில் ஆபாசமாகப் பேசி திரிய வேண்டும் என்றால், அது காரில் செல்பவர்களுக்கு அதிகம் பாதிப்பில்லை. ஆனால், துணிக்கடையில் இரவு வேலை முடிந்து 10 மணி பஸ்சுக்காக காத்திருக்கும் பெண்ணுக்கு பாதுகாப்பானதா என்பதை யோசிக்க வேண்டும்.

ஆக்கத்திற்கான கலை

ஆக்கத்திற்கான கலை

சினிமா மட்டுமல்ல எந்தவொரு கலையுமே மனிதர்களின் ஆக்கத்திற்காகத் தான் இருக்க வேண்டும். தன் மூளையில் தோன்றும் எல்லாவற்றையுமே படமாக்குவேன் என்று சொல்பவர் நிச்சயம் நல்ல படைப்பாளியாக இருக்க முடியாது. இனிமேலாவது ஓவியா தன் பொறுப்பை உணர்ந்து பேசுவாரா என்பதைப் பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X