இயக்குனர் பா ரஞ்சித் உடன் கூட்டணி அமைக்கும் சூர்யா?
சென்னை : இயக்குனர் பா ரஞ்சித் இப்பொழுது சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கி வருகிறார் இதில் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார்.
இயக்கத்தில் மட்டுமல்லாமல் தயாரிப்பிலும் கவனம் செலுத்திவரும் பா ரஞ்சித் பொம்மை நாயகி, குதிரைவால் போன்ற படங்களை தயாரித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது அடுத்த திரைப்படத்தில் சில உண்மைச் சம்பவங்களை கொண்ட கதையில் நடிகர் சூர்யா உடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சூப்பர் ஸ்டாருடன்
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உள்ள பா ரஞ்சித் இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் ரசிகர்களின் கவனத்தை பெற்று வெற்றி அடைந்து வருகிறது. மெட்ராஸ் என்ற மெகாஹிட் திரைப்படத்தைக் கொடுத்த பிறகு அடுத்தடுத்து தொடர்ந்து இரண்டு திரைப்படங்களில் சூப்பர் ஸ்டாருடன் பணியாற்றி இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தார்.

தயாரிப்பாளராக
ரஜினிகாந்தை இதுவரை கண்டிராத வேடத்தில் காலா மற்றும் கபாலியில் காட்டியதோடு ஒடுக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் அவர்களுக்காக குரல் கொடுக்கும் வகையிலும் தொடர்ந்து தன்னுடைய திரைப்படங்களை இயக்கி வருகிறார். இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் பல தரமான படங்களை தயாரித்து வருகிறார்.

குத்துச்சண்டை விளையாட்டு
இப்பொழுது குத்துச் சண்டை விளையாட்டை மையப்படுத்தி சார்பட்டா பரம்பரை என்ற படத்தை இயக்கி வருகிறார் இதில் ஆர்யா ஹீரோவாக நடித்து வருகிறார். 1970 மற்றும் 80-களில் சென்னையில் இரு பிரிவினருக்கிடையே நடந்த குத்துச்சண்டை விளையாட்டு போட்டிகளை மையப்படுத்தி இந்த கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு குதிரைவால்,பொம்மை நாயகி உள்ளிட்ட படங்களை தயாரித்து வருகிறார்.

விரைவில் அறிவிப்பு
சார்பட்டா பரம்பரை அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருக்கும் நிலையில் விரைவில் நேரடி பாலிவுட் படம் ஒன்றையும் இயக்க திட்டமிட்டுள்ள இயக்குனர் ரஞ்சித், சூர்யாவுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. உண்மை சம்பவங்களை மையப்படுத்தி இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சூர்யா இப்பொழுது பாண்டிராஜ் இயக்கத்தில் 40வது படத்தில் நடித்து வருகிறார் மற்றும் மணிரத்னம் தயாரிப்பில் நவரசா வெப் சீரிஸிலும் நடித்து வருகிறார். இவ்விரண்டையும் முடித்துவிட்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசலில் நடிக்க தயாராகி கொண்டிருந்தார். இந்த படங்களை அடுத்து பா ரஞ்சித் இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


Click it and Unblock the Notifications











