இன்பன் உதயநிதிக்கு 2வது இடியா?.. சோலோவா வந்தும் சோபிக்கலயா பராசக்தி.. இட்லி கடை போல ஆகிடாதே!
சென்னை: தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை எந்தளவுக்கு ஒரு ஃபீல் குட் படமோ அதே போலத்தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி உள்ள பராசக்தி படமும் நல்ல படம் தான். அதில், எந்தவொரு மாற்றுக் கருத்தும் இல்லை.
மேலும், சிவகார்த்திகேயனின் பாக்ஸ் ஆபீஸ் வளர்ச்சி நாளுக்கு நாள் வளர்ந்துக் கொண்டு தான் போகிறது. சீராகவே உயர்ந்த நிலையில் தான் 2 நாட்களில் 51 கோடி ரூபாய் வசூலை பராசக்தி படம் எடுக்க முடிந்துள்ளது என்பதை உணர்த்துகிறது.

சாக்னிக் உள்ளிட்ட பாக்ஸ் ஆபீஸ் டிராக்கர் சைட்டுகளுக்கும் தயாரிப்பு நிறுவனம் வெளியிடும் வசூல் நிலவரத்துக்கும் சில வேறுபாடுகள் இருந்தாலும், படம் வசூலில் அடிவாங்க காரணம் என்ன? திங்கட்கிழமை வசூல் இந்தியளவில் வெறும் 2.5 கோடி ரூபாய் தான் வந்ததாக வெளியான தகவல்கள் தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆகாஷ் பாஸ்கரன் ஹேப்பி: சுதா கொங்கரா மற்றும் சிவகார்த்திகேயன் இருவருக்கும் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் செம ஹேப்பியாக பூங்கொத்து எல்லாம் கொடுத்து 2 நாட்களில் பராசக்தி திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறிவிட்டது என சக்சஸ் பார்ட்டி வைத்து கொண்டாடி விட்டார். பொங்கல் விடுமுறை நாட்கள் இந்த வாரம் 4 நாட்களும் படம் ஓடினால் கண்டிப்பாக 100 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேவ் ராம்நாத் அதிருப்தி: ஆனால், இன்னொரு பக்கம் தயாரிப்பாளர்களில் ஒருவரான தேவ் ராம்நாத் பராசக்தி படத்தை திட்டமிட்டே விஜய் ரசிகர்கள் ஓடவிடாமல் செய்வதாக பகிரங்க குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். மேலும், பேட்டியும் கொடுத்துள்ளார். தக் லைஃப் படத்திற்கு சொன்ன விமர்சனங்களை வெட்டி ஒட்டி வருகின்றனர் என்று. விஜய் படங்கள் வரும் போதும், அஜித் படங்கள் வரும்போதும், ரஜினிகாந்த், சூர்யா போன்ற முன்னணி நடிகர்கள் வரும்போதும் இதே போன்ற நெகட்டிவிட்டி அதிகம் இருப்பது தான் தொடர்ந்து படங்கள் தோல்வியடைய காரணம் என்கின்றனர். ஆனால், அதே சமயம் டாப் நடிகர்களின் படங்கள் பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை உறுதி செய்து வரும் நிலையில், பராசக்தி படக்குழு ஏன் பதற்றம் அடைகிறது என்கிற கேள்வியையும் நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

இட்லி கடையை தொடர்ந்து: ரெட் ஜெயன்ட் மூவிஸ் சார்பில் இன்பன் உதயநிதி வழங்கிய முதல் படம் தனுஷின் இட்லி கடை. அந்த படம் காந்தாரா சாப்டர் 1 படத்துடன் மோதிய நிலையிலும், அதிகபட்சமாக 71 கோடி ரூபாய் வரை வசூல் ஈட்டியது. ஆனால், குபேரா, தேரே இஷ்க் மெயின் போன்ற தனுஷ் படங்களை போல 100 கோடி வசூலை ஈட்ட முடியவில்லை. அதே நிலைமைதான் தற்போது பராசக்தி படத்துக்கு நிகழுமா? இன்பன் உதயநிதி வெளியிட்ட 2வது படமான பராசக்தி படம் 100 கோடி வசூலை கடக்குமா? கடக்காதா? என பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கமல் ட்வீட் காரணமா?: ஒரு பக்கம் விஜய் ரசிகர்கள் தான் படத்தை ஓடவில்லை என்று படக்குழுவே புலம்ப ஆரம்பித்த நிலையில், இன்னொரு பக்கம் கமல்ஹாசன் 'பராசக்தி' படம் திமுகவின் தேர்தல் முரசொலியாக இருக்கும் என உதயநிதிக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்ட கடிதம் தான் காரணம் என்றும் நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











