’சுயம்பு சிம்பு’.. இடியுடன் கூடிய மழை பெய்யலாம்.. மாநாடு படத்தில் பார்த்திபனும் இணைகிறாரா?

சென்னை: விரைவில் நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிக்க உள்ளேன் என்ற அறிவிப்பை நடிகர் பார்த்திபன் வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Simbhu, VJ Ramya, Rhema Ashok Lock Down Birthday celebration

'சுயம்பு சிம்பு' என தனது ஸ்டைலில் சிம்புவுக்கு அவர் அளித்த பாராட்டு மடலுக்கு சிம்புவிடம் இருந்து பண்புடன் பதில் வந்ததை பார்த்திபன் பதிவிட்டுள்ளார்.

அரசியல் படமான மாநாடு படத்தில் பார்த்திபனும் இணைகிறாரா? என்ற சந்தேகம் இதன்மூலமாக எழுந்துள்ளது.

இணைந்து நடித்ததில்லை

இணைந்து நடித்ததில்லை

தல அஜித், விஜய்சேதுபதி, சூர்யா உள்ளிட்ட ஏகப்பட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ள நடிகர் பார்த்திபன் இதுவரை நடிகர் சிம்புவுடன் இணைந்து நடிக்கவில்லை. இந்நிலையில், சிம்புவுக்கு பாராட்டு மடல் அனுப்பியுள்ள பார்த்திபன் விரைவில் இருவரும் இணைந்து நடிக்கப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

சுயம்பு சிம்பு

சுயம்பு சிம்பு

"சுயம்பு'சிம்பு பற்றி பாராட்டு அவருக்கு எட்ட,உதவியாளர் பூங்கொத்தும் சாக்லெட்டுமாக வந்தார்.Mr Simbu நன்றியதில் Mr பண்பு ஆனார் எண்ணப்புத்தகத்தில்! "எனக்கே ஆச்சர்யமாயிருக்கு நாம ரெண்டு பேரும் சேந்து இன்னும் ஏன் workபண்ணலேன்னு"அதாகப்பட்டது.... விரைவில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம்!!!" என நடிகர் பார்த்திபன் ட்வீட் போட்டுள்ளார்.

மாநாடு படத்தில்

மாநாடு படத்தில்

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் அரசியல் படம் மாநாடு. ஏற்கனவே அந்த படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ. சந்திரசேகர், எஸ்.ஜே. சூர்யா என ஏகப்பட்ட பிரபல நடிகர்கள் நடித்து வருகின்றனர். இந்நிலையில், அந்த படத்தில் பார்த்திபனும் இணைகிறாரா என்ற சந்தேகம் தற்போது உருவாகி உள்ளது.

சுரேஷ் காமாட்சி வாழ்த்து

சுரேஷ் காமாட்சி வாழ்த்து

மேலும், இந்த சந்தேகத்தை உறுதிபடுத்தும் விதமாக மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அட்வான்ஸ் வாழ்த்துக்கள் சார் என ட்வீட் போட்டுள்ளார். சுரேஷ் காமாட்சியின் அந்த ட்வீட்டுக்கு கீழே அப்போ மாநாடு படத்தில் பார்த்திபன் சாரும் இருக்கிறாரா சார் என்றும் கன்பார்ம் பண்ணிட்டீங்க சூப்பர் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அரசியல் படம்

அரசியல் படம்

நானும் ரவுடி தான் படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி உள்ள துக்ளக் தர்பார் படத்திலும், நடிகர் பார்த்திபன் நடித்துள்ளார். அரசியல் படமாக உருவாகி உள்ள அந்த படத்தில் பார்த்திபன் அரசியல்வாதியாக நடித்துள்ளார். இந்நிலையில், சிம்புவின் அரசியல் படமான மாநாடு படத்திலும் பார்த்திபன் கச்சிதமான தேர்வாக இருப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X