தமிழர்களை அவமதிக்கும் "தாக்கரே" நடிகர்.. "பேட்ட" படத்துக்கு வருமா சிக்கல்?
சென்னை: தாக்கரே படத்தில் தென்னிந்தியர்களை தாக்கி பேசியுள்ளார் நவாசுத்தீன் சித்திக்கி. இதனால் பேட்ட படத்திற்கு பிரச்சனை வருமா என்று சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள பேட்ட படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகம் ஆகிறார் பாலிவுட் நடிகர் நவாசுத்தீன் சித்திக்கி. அவர் அபிஜித் பின்சே இயக்கத்தில் பால் தாக்கரேவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்துள்ளார்.
நவாசுத்தீன் சித்திக்கி பால் தாக்கரேவாக நடித்துள்ளதை சிவ சேனா கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது.

ட்ரெய்லர்
தாக்கரே படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. அதில் நவாசுத்தீன் சித்தித்கி தென்னிந்தியர்களுக்கு எதிராக பேசிய வசனம் உள்ளது. ட்ரெய்லரில் தமிழர்களை அவமதித்துவிட்டார் நவாசுத்தீன் என்று ஏற்கனவே சமூக வலைதளங்களில் பேச்சு கிளம்பியுள்ளது.
சித்தார்த்
தாக்கரே பட ட்ரெய்லரில் தென்னிந்தியர்களை தாக்கிப் பேசியுள்ளதை பார்த்து ட்விட்டரில் குமுறியுள்ளார் நடிகர் சித்தார்த்.
வெறுப்பு
தமிழர்கள் மீது அப்படி என்ன வெறுப்பு என்று விவாதம் துவங்கியுள்ளது.
பேட்ட
தாக்கரே ட்ரெய்லரால் பேட்ட படத்திற்கு எதிர்ப்பு கிளம்புமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழர்களை இழிவாக பேசிய நவாசுத்தீன் சித்திக்கி நடித்த பேட்ட படத்திற்கு ஆதரவு அளிக்கக் கூடாது என்று ஏற்கனவே ஒரு கோஷ்டி கிளம்பிவிட்டது. ஆனால் பேட்ட ரஜினி படமாச்சே.


Click it and Unblock the Notifications