பொங்கலுக்கு வெளிவருமா பொன்னியின் செல்வன்!?.. அப்டேட் கொடுத்த கார்த்தி
சென்னை: கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக எடுத்து வருகிறார் மணிரத்னம். இது மணிரத்னத்தின் பெருங்கனவு படமாகும்.
இந்த படத்தில் கார்த்தி, சரத்குமார், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, விக்ரம், பேபி சாரா, த்ரிஷா என முன்னனி நடிகர்களின் பட்டாளமே நடிக்கிறது.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். இந்த படத்தின் அப்டேட்டை நடிகர் கார்த்தி பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் லைவ்
கடந்த வாரம் கார்த்தியின் நடிப்பில் வெளியாகி வெற்றிநடை போட்டு வரும் திரைப்படம் சுல்தான். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து கார்த்தியும், சுல்தான் படத்தின் நாயகி ரஷ்மிகாவும் வீடியோ கால் சாட்டில் இன்ஸ்டாகிராம் லைவ்வில் இன்று உரையாடினர்.

ஆண்டின் இறுதியில்
இன்ஸ்டாகிராம் லைவ்வில் கார்த்தி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். 2019ம் ஆண்டு கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படம் பெரிய வெற்றி பெற்றது. கைதியின் 2ம் பாகம் குறித்து பேசிய கார்த்தி இந்த ஆண்டின் இறுதியில், அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் கைதி 2 படப்பிடிப்பு தொடங்கும் என கூறியுள்ளார்.

சூர்யா தயாரிப்பில்
பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு இரும்புத்திரை இயக்குனர் மித்ரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், அதை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் முத்தையாவுடன் இணையவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார் கார்த்தி. முத்தையா இயக்கும் படத்தை தனது அண்ணன் சூர்யா தயாரிக்கவுள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

70 சதவீதம்
அதை தொடர்ந்து பொன்னியின் செல்வன் படத்தை குறித்து பேசிய கார்த்தி, 70 சதவீதம் படப்பிடிப்பு முடிந்துள்ளதாகவும் 2022ம் ஆண்டு பொங்கலுக்கு படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார். அதுவும் இந்தியாவில் கொரோனா பரவலின் நிலவரம் பொறுத்தே படம் வெளியாகும் என கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











