போர்க்குதிரை ரிலீஸானால் சாந்தினியின் 'லெவலே' வேற..
சென்னை: கோலிவுட்டில் பெயர் வாங்க முடியாமல் தவிக்கும் சாந்தினிக்கு போர்க்குதிரை படமாவது கைகொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
சென்னைப் பொண்ணு சாந்தினி கே. பாக்யராஜின் மகன் சாந்தனு ஹீரோவாக அவதாரம் எடுத்த சித்து +2 படம் மூலம் கோலிவுட் வந்தார். அந்த படம் ஓடாதததால் சாந்தினியை யாரும் கண்டுகொள்ளவில்லை.
அதையடுத்து அவர் ஆர்யாவின் தம்பி சத்யாவுடன் ஜோடி சேர்ந்தார். படித்துறை என்று பெயரிடப்பட்ட அந்த படம் தனக்கு நல்ல பெயர் வாங்கிக் கொடுக்கும் என்று நம்பினார்.

படித்துறை
படித்துறை படம் ரிலீஸாகாமல் பரண் மேல் வைக்கப்பட்டது. இதனால் சாந்தினிக்கு கவலை தான் மிஞ்சியது. அடுத்ததாக அவர் நடித்த நான் ராஜாவாக போகிறேன் படமும் ஓடவில்லை.

டோலிவுட்
தமிழிலில் தான் ஒன்னும் நடக்க மாட்டேன் என்கிறது என தெலுங்கு பக்கம் போனவருக்கு அங்கும் படங்கள் சரியாக ஓடவில்லை.

போர்க்குதிரை
நடித்த படங்கள் எதுவும் கைகொடுக்காத நிலையில் சாந்தினி நடித்து ரிலீஸுக்கு வருகிறது போர்க்குதிரை. படத்தில் உசிலம்பட்டி பெண்ணாக வரும் அவருக்கு சைதன்யா என்ற புதுமுகம் ஹீரோ ஜோடி.

முத்தழகு
போர்க்குதிரையில் தனது கதாபாத்திரம் பருத்திவீரன் முத்தழகு போன்று பேசப்படும் என்று சாந்தினி தெரிவித்துள்ளார்.

லெவலே வேற
போர்க்குதிரை ரிலீஸானால் சாந்தினியின் லெவலே வேறு என்று ஆகிவிடும் என இயக்குனர் பிரவீன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











