இந்த வீட்ல என்ன பண்ணாலும் தப்பு.. அண்ணாச்சியையும் ராஜுவையும் பிரிக்க திட்டமிடுகிறாரா பிரியங்கா?

சென்னை: கான்ட்ராக்டர் நேசமணி கெட்டப்பில் கலகலப்பாக இருந்து வந்த பிரியங்கா திடீரென ஒரு ஓரத்தில் உட்கார்ந்து புலம்பும் மூன்றாவது புரமோ வெளியாகி உள்ளது.

அக்‌ஷராவின் பர்ஃபார்மன்ஸ் தனக்கு பிடிக்கவில்லை என இமான் அண்ணாச்சி சொன்னவுடன் மீண்டும் அழுகாச்சி டிராமாவை அக்‌ஷரா போட ஆரம்பித்த புரமோ முன்னதாக வெளியாகி ரசிகர்களை கடுப்பாக்கியது.

இந்நிலையில், அக்‌ஷராவுக்கு திடீரென பரிந்து பேசுவது போல ராஜு பாயிடம் இமான் அண்ணாச்சி பற்றி பேசும் பிரியங்காவை நாசுக்காக அவாய்டு பண்ணிவிட்டு ராஜு ஜெயமோகன் நகரும் காட்சிகள் இந்த புரமோவில் இடம்பெற்றுள்ளன.

பிரிக்கும் பிளான்

பிரிக்கும் பிளான்

பிரியங்காவுக்கு இந்த பிக் பாஸ் வீட்டில் ஆரம்பத்தில் இருந்தே இமான் அண்ணாச்சி உடன் பிரச்சனை. மேலும், அக்‌ஷராவுக்கும் பிரியங்காவுக்கும் கூட ஆகவே ஆகாது. ஆனால், ராஜு ஜெயமோகன் அக்‌ஷராவுடன் நட்பாக பழகி வரும் நிலையில், அண்ணாச்சி - ராஜு நட்பை பிரிக்க பிரியங்கா திட்டமிட்டு வருவதாக தற்போது வெளியாகி உள்ள மூன்றாவது புரமோவை பார்த்த ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது ரூல்ஸ் பிரேக் இல்லையா

இது ரூல்ஸ் பிரேக் இல்லையா

நிரூப்பிடம் அதிகாரம் சென்று அவர் எந்த அறிவிப்பையும் சொல்லாமல் அக்‌ஷராவுடன் ஆலோசனை நடத்த சென்ற போது பெட்ரூம் ஏரியாவுக்குள் அண்ணாச்சி நுழைந்த நிலையில், அண்ணாச்சி ரூல்ஸ் பிரேக் பண்ணிட்டாருன்னு அந்த கத்து கத்திய பிரியங்கா நேற்று, நிரூப் காயின் வைப்பதற்கு முன்பாக பெட்ரூமிற்குள் நுழைந்து நிரூப்பிடம் திட்டு வாங்கி பனிஷ்மென்ட்டும் பெற்றது எல்லாம் ரூல்ஸ் பிரேக் இல்லையா? என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

அக்‌ஷரா மேட்டர்

அக்‌ஷரா மேட்டர்

ராஜு ஜெயமோகன் அக்‌ஷரா கதைக்கு லைக் போட்டார் என்பதற்காக அப்படி பிரச்சனை பண்ண பிரியங்கா இப்போ என்ன திடீர்னு அக்‌ஷரா மீது பாசம் கொண்டவர் போல ராஜுவிடம் இமான் அண்ணாச்சி பண்ணது கொஞ்சம் கூட சரியில்லை என தனியாக அழைத்து பேசி பிரைன் வாஷ் செய்கிறார்? என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

எல்லாமே நடிப்பு

எல்லாமே நடிப்பு

பிக் பாஸ் வீட்டில் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால் தங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என கமல் கொடுத்த சிக்னலை புரிந்து கொண்டு நல்லவர் போல பிரியங்கா நடித்து வருகிறார் என்பது ராஜுவுக்கு நல்லாவே தெரியும். அதனால், தான் பிரியங்கா விரித்த வலையில் சிக்காமல் தப்பிக்க எல்லாமே மைண்ட்ல இருக்கு.. இதோ வரேன்னு எஸ்கேப் ஆகிறார் என்றும் கூறி வருகின்றனர்.

எல்லாமே தப்பு

எல்லாமே தப்பு

ராஜு உங்களுக்கு இந்த கான்வர்சேஷன் பற்றி பேச விருப்பம் இல்லையா? என பிரியங்கா கேட்டுவிட்டு பின்னர் தனிமையில் புலம்ப ஆரம்பித்து விடுகிறார். இந்த வீட்டில் ஏதாவது சொன்னாலும் தப்பு.. சொல்லணும்னு நினைச்சாலும் தப்பு, சொல்லாம இருந்தாலும் தப்பு என பிரியங்கா சோகமாக பேசும் புரமோ ரசிகர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X