என்னவர் எப்ப சொன்னாலும் நடிப்பை விட்டுடுவேன்... உருகிய காஜல் அகர்வால்

மும்பை : நடிகை காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இதையடுத்து அவர் தொடர்ந்து நடிப்பாரா அல்லது நடிப்பை கைகழுவுவாரா என்ற கேள்வி ரசிகர்களிடம் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த சந்தேகத்திற்கான பதிலை அவர் தெளிவாக தெரியப்படுத்தியுள்ளார்.

காஜல் திருமணம்

காஜல் திருமணம்

நடிகை காஜல் அகர்வால் விஜய், அஜித் போன்றே தெலுங்கு இன்டஸ்ட்ரியிலும் ஒரு வலம் வந்தவர். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் சில படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். மேலும் இந்தியன் 2 படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் அவர் கௌதம் என்பவரை மணமுடித்துள்ளார்.

பதிலளித்த காஜல்

பதிலளித்த காஜல்

இதன்மூலம் அவர் தொடர்ந்து நடிப்பாரா என்ற கேள்வி வழக்கம்போல ரசிகர்களிடம் எழுந்துள்ளது. இதனிடையே ஆன்லைன்மூலம் ரசிகர்களிடம் பேசிய அவர், தனது கணவர் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தனக்கு முழுமையான ஆதரவு அளித்து வருவதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

கணவரின் விருப்பம்

கணவரின் விருப்பம்

இதன்மூலம் தான் சினிமாவில் தொடர்ந்து சிறப்பான கவனத்தை செலுத்த முடிவதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் எவ்வளவு காலம் தான் தொடர்ந்து நடிப்பேன் என்பது குறித்து தெரியாது என்றும் தன்னுடைய கணவர் நடிப்பை விடும்படி கூறினால் தான் விட்டுவிடுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.

காஜல் முடிவு

காஜல் முடிவு

தற்போது தமிழ் மற்றும் தெலுங்கில் ஒப்பந்தமாகியுள்ள படங்களில் தான் நடிக்கவுள்ளதாகவும் லாக்டவுன் ஓரளவிற்கு நார்மலாகியவுடன் அந்த படங்களில் படப்பிடிப்பு துவங்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் தற்போதைக்கு தனது கவர்ச்சிக்கு அவர் விடுமுறை விட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X